SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசை : 2வது இடத்துக்கு முன்னேறினார் கோஹ்லி

2017-12-08@ 00:11:58

துபாய் : சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் டெஸ்ஸ்ட் போட்டிகளுக்கான பேட்டிங் தரவரிசையில், இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி 3 இடம் முன்னேறி 2வது இடத்தை பிடித்துள்ளார். இலங்கை அணியுடன் நடந்த டெஸ்ட் தொடரில் 610 ரன் விளாசி அசத்திய கோஹ்லி, அதிக இரட்டை சதம் விளாசிய கேப்டன்கள் பட்டியலில் வெஸ்ட் இண்டீசின் பிரையன் லாராவை பின்னுக்குத் தள்ளி உலக சாதனை படைத்தார். கொல்கத்தா ஈடன் கார்டனில் நடந்த முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் டக் அவுட்டான கோஹ்லி, அதன் பிறகு விளையாடிய 4 இன்னிங்சில் 104*, 213, 243, 50 ரன் அடித்தது குறிப்பிடத்தக்கது. இந்த சிறப்பான செயல்பாட்டின் மூலமாக ஐசிசி தரவரிசையில் அவர் 2வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். இலங்கை தொடருக்கு முன்பாக 6வது இடத்தில் பின் தங்கியிருந்த கோஹ்லி, தனது அமர்க்களமான ஆட்டத்தின் மூலம் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர், செதேஷ்வர் புஜாரா (இந்தியா), கேன் வில்லியம்சன் (நியூசி.), ஜோ ரூட் (இங்கி.) ஆகியோரை பின்னுக்குத் தள்ளினார். தற்போது ஒருநாள் மற்றும் டி20 பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள அவர், தென் ஆப்ரிக்க தொடரிலும் ரன் குவிப்பை தொடர்ந்தால் டெஸ்ட் ரேங்கிங்கிலும் முதலிடத்துக்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளது.

மூன்று வகை கிரிக்கெட் போட்டிக்குமான ஐசிசி தரவரிசையில் ஒரே நேரத்தில் நம்பர் 1 ஆக இருந்த ஒரே வீரர் என்ற பெருமை, ஆஸ்திரேலிய அணி முன்னாள் கேப்டன் ரிக்கி பான்டிங் வசம் உள்ளது. அவர் டிசம்பர் - ஜனவரி 2005-06ல் இவ்வாறு நம்பர் 1 அந்தஸ்தை கைப்பற்றி இருந்தார். மற்ற இந்திய வீரர்களில் முரளி விஜய் 3 இடம் முன்னேறி 25வது இடத்தை பிடித்துள்ளார். புஜாரா 2 இடம் பின்தங்கி 4வது இடத்தில் உள்ளார்.
பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் ஜடேஜா ஒரு இடம் பின்தங்கி 3வது இடத்தை பிடித்த நிலையில், அஷ்வின் 4வது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். ஆல் ரவுண்டர்களுக்கான ரேங்கிங்கில் ஜடேஜா 2வது இடத்திலும், அஷ்வின் 4வது இடத்திலும் உள்ளனர். அணிகளுக்கான தரவரிசையில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • tiruchurpooram

    கேரளாவில் பிரசித்திப் பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா : கோலாகலமாக நடந்தது

  • saintjordysayspain

    செயிண்ட் ஜோர்டி தினம் : ஸ்பெயினில் ஒருவருக்கொருவர் புத்தகங்கள், மலர்கள் பரிசளித்து கொண்டாட்டம்

  • bookfairchennai

    உலகப் புத்தக தினத்தையொட்டி சென்னை கன்னிமரா நூலகத்தில் நடைபெற்ற புத்தக கண்காட்சி நிறைவு

  • 26-04-2018

    26-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • bangladesh_accd1

    1,134 உயிர்களை பலிகொண்ட ஆடை தொழிற்சாலை விபத்தின் 5ம் ஆண்டு நினைவு தினம் வங்கதேசத்தில் அனுசரிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்