SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கர்நாடகாவுடன் ரஞ்சி கால் இறுதி 173 ரன்னில் சுருண்டது மும்பை

2017-12-08@ 00:11:29

நாக்பூர் : கர்நாடக அணியுடனான ரஞ்சி கோப்பை கால் இறுதியில் (5 நாள் ஆட்டம்), மும்பை அணி முதல் இன்னிங்சில் 173 ரன்னுக்கு சுருண்டது. வினய் குமார் அபாரமாகப் பந்துவீசி ஹாட்ரிக் உட்பட 6 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். நாக்பூர் விதர்பா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாசில் வென்ற கர்நாடகா முதலில் பந்துவீசியது. மும்பை தொடக்க வீரர்கள் பிரித்வி ஷா 2, ஜெய் பிஸ்டா 1 ரன் எடுத்து வினய் வேகத்தில் பெவிலியன் திரும்பினர். அடுத்து வந்த ஆகாஷ் பார்கர் 0, சித்தேஷ் லாட் 8 ரன் எடுத்து வினய் பந்துவீச்சில் அணிவகுக்க, மும்பை அணி 21 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து திணறியது. முதல் ஓவரின் கடைசி பந்து, 3வது ஓவரின் முதல் 2 பந்தில் விக்கெட் வீழ்த்திய வினய் ஹாட்ரிக் சாதனை படைத்தார். சூரியகுமார் யாதவ் 14 ரன் எடுத்து அரவிந்த் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, கேப்டன் ஆதித்யா தாரே 4, ஷிவம் துபே 7 ரன்னில் வெளியேறினர். ஓரளவு தாக்குப்பிடித்த ஹெர்வாத்கர் 32 ரன், கோத்தாரி 1 ரன் எடுத்து வினய் வேகத்தில் விக்கெட்டை பறிகொடுத்தனர். மும்பை அணி 35.5 ஓவரில் 103 ரன்னுக்கு 9 விக்கெட் இழந்து பரிதவித்த நிலையில், அதிரடியாக விளையாடிய தவால் குல்கர்னி கவுரவமான ஸ்கோரை எட்ட உதவினார்.

கடைசி விக்கெட்டுக்கு குல்கர்னி - ஷிவம் மல்கோத்ரா ஜோடி 70 ரன் சேர்த்தது. குல்கர்னி 75 ரன் (132 பந்து, 9 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி அரவிந்த் பந்துவீச்சில் வினய் குமாரிடம் பிடிபட்டார். மல்கோத்ரா 7 ரன்னுடன் (41 பந்து, 1 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தார். கர்நாடகா பந்துவீச்சில் வினய் குமார் 15 ஓவரில் 2 மெய்டன் உட்பட 34 ரன் மட்டுமே விட்டுக் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார். அரவிந்த் 2, மிதுன், கவுதம் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய கர்நாடகா, முதல் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 115 ரன் எடுத்துள்ளது. சமர்த் 40 ரன் எடுத்து துபே பந்துவீச்சில் கிளீன் போல்டானார். மயாங்க் அகர்வால் 62, கவுனைன் அப்பாஸ் 12 ரன்னுடன் களத்தில் உள்ளனர். மத்திய பிரதேசம் 223/6: டெல்லி அணியுடன் விஜயவாடாவில் நடக்கும் கால் இறுதியில், மத்திய பிரதேசம் முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 223 ரன் எடுத்துள்ளது. டேன் 59, நமன் ஓஜா 49, ஷுபம் ஷர்மா, கேப்டன் பண்டேலா தலா 17 ரன், பத்திதார் 2, அங்கித் ஷர்மா 13 ரன்னில் ஆட்டமிழந்தனர். ஹர்பிரீத் சிங் 47, புனீத் தத்தே 8 ரன்னுடன் களத்தில் உள்ளனர்.

பெங்கால் 261/6: ஜெய்பூரில் குஜராத் அணிக்கு எதிரான கால் இறுதியில் பெங்கால் 6 விக்கெட் இழப்புக்கு 261 ரன் குவித்துள்ளது. அபிமன்யு ஈஸ்வரன் 129 ரன் (246 பந்து, 17 பவுண்டரி), அனுஸ்துப் மஜும்தார் 94 ரன் (177 பந்து, 11 பவுண்டரி) விளாசினர். அமித் 8, கானி 6 ரன்னுடன் களத்தில் உள்ளனர்.
* சூரத்தில் கேரளா - விதர்பா அணிகளிடையே நடைபெறும் கால் இறுதியின் முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக பாதிக்கப்பட்டது. 24 ஓவர் மட்டுமே வீசப்பட்ட நிலையில், விதர்பா 3 விக்கெட் இழப்புக்கு 45 ரன் எடுத்துள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 15-12-2017

  15-12-2017 இன்றைய சிறப்பு படங்கள்

 • Ragul_Fishermen

  ஓகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி, கேரளா மீனவர்களின் குடும்பத்தினருடன் ராகுல் காந்தி சந்திப்பு

 • AnubutiShatabditrain

  விமானம் போன்ற சொகுசு வசதிகளுடன் கூடிய அனுபூதி பெட்டி: சதாப்தி ரயில்களில் இயக்க ரயில்வே திட்டம்

 • JamaMasjid_Crack

  361 ஆண்டுகள் பழமையான ஜமா மசூதியில் விரிசல்: விரைவில் சீரமைக்க ஆர்வலர்கள் கோரிக்கை

 • PeriyaPandian_Homage

  காவல் ஆய்வாளர் பெரியபாண்டி உடல் சென்னை வந்தடைந்தது: கறுப்புப்பட்டை அணிந்து தலைவர்கள், அதிகாரிகள் இறுதி அஞ்சலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்