SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குமரி கடலோர கிராமங்களில் தீராத சோகம் 1013 மீனவர்கள் கரை திரும்பவில்லை

2017-12-08@ 00:10:56

நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் கடந்த 29ம் தேதி ஓகி புயலுக்கு பெரும் பாதிப்புகள் ஏற்பட்டன. 2 மீனவர்கள் உட்பட 11 பேர் வரை உயிர் இழந்துள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியிடப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்களில் மீன்வளத்துறை, காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் மூலம், கள ஆய்வு செய்து, புயல் நேரத்தில் கடலுக்கு மீன்பிடிக்க சென்று, கரை திரும்பாத படகுகளின் பதிவு எண், மீனவர்களின் பெயர் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் இருந்து 65 பேரும், கேரளாவில் இருந்து 92 பேரும் இன்னும் கண்டறியப்பட வேண்டியுள்ளதாக அரசுகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. மேலும் இது தொடர்பாக மீனவ கிராமங்களில் நடைபெறுகின்ற கணக்கெடுப்பு அடிப்படையில்தான் கூடுதல் விவரங்கள் தெரியவரும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் மீனவ அமைப்புகள் இந்த எண்ணிக்கை சரியானது அல்ல என்று கூறி வருகின்றனர்.

மொத்தம் 83 விசைப்படகு, 5 பிளைவுட் படகுகளில் சென்ற 1013 மீனவர்கள் மாயமானவர்கள் பட்டியலில் உள்ளனர். இவர்கள் இன்னமும் கரை திரும்பவில்லை என்று கூறும் மீனவ அமைப்பினர், இவர்கள் வழக்கமாக மீன்பிடிக்க செல்கின்ற ஆழ்கடல் பகுதியின் ஜிபிஎஸ் நிலைகளையும் புள்ளி விவரத்துடன் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே குமரி மாவட்ட மீனவர்கள் 3 பேரையும் சேர்த்து தேடுதல் வேட்டையில் இந்திய கப்பல்படையினர் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அவர்கள் கடற்கரை சார்ந்த பகுதியில் மட்டுமே தேடுதல் வேட்டை நடத்தி வருவதாகவும், ஆழ்கடல் பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எனவே தேடுதல் வேட்டையை ஆழ்கடல் பகுதியிலும் மேற்கொள்ள மீனவ பிரதிநிதிகள் வலியுறுத்தி வருகின்றனர். காணாமல் போனதாக கருதப்படுகின்ற மீனவர்கள் அனைவரும் சொந்த ஊர் திரும்பினர் அல்லது பாதுகாப்பான இடங்களில் உள்ளனர் என்ற தகவல்கள் இக்குடும்பங்களுக்கு தெரியவந்தால் மட்டுமே மீனவ கிராமங்களில் அமைதி நிலவும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • thaliland_boyshome

    தாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட 12 சிறுவர்களும் வீடு திரும்பினர்

  • gujaratheavyrain

    குஜராத் மாநிலம் கிர்சோம்நாத் பகுதியில் பலத்தமழை : பொதுமக்கள் பாதிப்பு

  • vintage_car_gurgaon

    பழங்குடிப் பொருட்களிலிருந்து விண்டேஜ் கார்கள் வரை... பல்வேறு வகையான கலைப்பொருட்களை உள்ளடக்கிய குர்கான்!

  • public_trans_venen

    வெனிசுலாவில் அரசு பேருந்துக்கு கடும் கிராக்கி: மக்கள் நாய் வண்டியில் ஏறிச் செல்லும் அவலம்!

  • Manilarainstorm

    பிலிப்பைன்ஸில் கனமழை மற்றும் புயல்: வெள்ளக்காடான மணிலா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்