SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எடப்பாடி, ஓபிஎஸ் இணைந்து ஆர்கே நகர் தொகுதியில் பிரசாரம்

2017-12-08@ 00:04:56

சென்னை: ஆர்.கே.நகர் தொகுதியில் ராசியான இடத்தில் பிரசாரத்தை தொடங்குவதால் கண்டிப்பாக  வெற்றி பெறுவோம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே அதிமுகவின் தேர்தல் அலுவலகத்தை நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இதில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயக்குமார், கே.பி.முனுசாமி, மைத்ரேயன் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தலைவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, கொருக்குப்பேட்டை ஹரிநாராயணபுரம் பகுதியில் தேர்தல் பிரசாரத்தை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்து பேசுகையில், ‘‘ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை பெற்று முழு பலத்துடன் போட்டியிடுகிறோம். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இந்த தொகுதியில் போட்டியிட்டதால் இந்தியா முழுவதும் பேசப்பட்டது.

ஜெயலலிதா இத்தொகுதிக்காக ஏராளமான நலத்திட்டங்களை செய்துள்ளார். ஆர்.கே.நகர் தொகுதியில் ஹரிநாராயணபுரம் ராசியான இடம். இதனால்தான் இங்கிருந்து பிரசாரத்தை தொடங்குகிறோம். இந்த தேர்தலில் கண்டிப்பாக வெற்றிபெறுேவாம். ஆர்.ேக.நகர் தொகுதியில் ஜெயலலிதா விட்டுசென்ற பணிகளை தொடர்ந்து செய்வோம்’’ என்றார்.

இதையடுத்து, ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், ‘‘ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக மதுசூதனன் நிறுத்தப்பட்டுள்ளார். 1991ல் இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று அமைச்சராக மதுசூதனன் பதவி வகித்தார். பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு அதிமுக பல்வேறு நலத்திட்டங்களை செய்து கொடுத்துள்ளது. இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு வாக்களித்து வெற்றிபெற செய்தால் ஆர்.கே.நகர் தொகுதியில் பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றப்படும்’’ என்றார்.  முன்னதாக, கட்சி தேர்தல் அலுவலகத்தை முதல்வர் திறக்க வந்ததால் காசிமேடு பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பள்ளிக்கு சென்ற மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பெரிதும் சிரமத்துக்குள்ளானார்கள்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • thaliland_boyshome

    தாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட 12 சிறுவர்களும் வீடு திரும்பினர்

  • gujaratheavyrain

    குஜராத் மாநிலம் கிர்சோம்நாத் பகுதியில் பலத்தமழை : பொதுமக்கள் பாதிப்பு

  • vintage_car_gurgaon

    பழங்குடிப் பொருட்களிலிருந்து விண்டேஜ் கார்கள் வரை... பல்வேறு வகையான கலைப்பொருட்களை உள்ளடக்கிய குர்கான்!

  • public_trans_venen

    வெனிசுலாவில் அரசு பேருந்துக்கு கடும் கிராக்கி: மக்கள் நாய் வண்டியில் ஏறிச் செல்லும் அவலம்!

  • Manilarainstorm

    பிலிப்பைன்ஸில் கனமழை மற்றும் புயல்: வெள்ளக்காடான மணிலா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்