SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விஷால் ஆதரவாளர்கள் எங்களை மிரட்டி கையெழுத்து வாங்கினர்

2017-12-08@ 00:04:52

சென்னை: நடிகர் விஷாலின் ஆதரவாளர்கள் எங்களை மிரட்டி கையெழுத்து வாங்கினர் என்று கூறியதால்தான் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது என்று  தேர்தல் அதிகாரி கூறினார். தமிழக தேர்தல் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட விண்ணப்பம் செய்த 145 மனுக்கள் மீதும், தேர்தல் சட்டத்துக்கு உட்பட்டே பரிசீலனை செய்யப்பட்டது. நடிகர் விஷால் மனுவை முன்மொழிந்து கையெழுத்திட்ட தீபன் மற்றும் சுமதி ஆகிய 2 பேரையும் சிலர் கடந்த 5ம் தேதி தண்டையார்பேட்டை மண்டல அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர். அவர்கள் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம், “நடிகர் விஷாலின் ஆதரவாளர்கள் எங்களை மிரட்டி வேட்புமனுவில் கையெழுத்து வாங்கினர். இதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை” என்று கூறினர். அதற்கான வீடியோ ஆதாரம் தேர்தல் ஆணையத்திடம் உள்ளது. அதனால்தான் விஷால் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து நடிகர் விஷால் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை சந்தித்து 6 பக்க புகார் கடிதம் நேற்று முன்தினம் மாலை கொடுத்தார். அந்த கடிதத்திலும், இந்திய தேர்தல் ஆணையத்துக்கு புகார் கொடுப்பதற்கு பதில், மாநில தேர்தல் ஆணையருக்கு புகார் அளிப்பதாக தவறாக இருந்தது. அந்த தவறையும் திருத்தி, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைத்தோம். விஷால் தரப்பிலும், தங்களது தவறை திருத்தி நேற்று முன்தினம் நள்ளிரவு மீண்டும் ஒரு புகார் மனு மெயில் மூலம் எங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளும் விஷாலின் புகார் கடிதத்துக்கு உடனடியாக பதில் அனுப்பி வைத்தனர். அந்த கடிதத்தை நேற்று மதியம் 12.45 மணிக்கு எங்களது அலுவலக ஊழியர் மூலமே விஷாலிடம் வழங்கினோம்.

தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் விஷாலுக்கு அளித்த பதில் கடிதத்தில், “ஆர்.கே.நகர் தேர்தல் நடத்தும் அதிகாரியின் முடிவுதான் இறுதியானது. இதுகுறித்து தாங்கள் எதுவும் விளக்கம் அளிக்க நேரிட்டால் ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரியிடமே முறையிட வேண்டும். மேலும், 7ம் தேதி (நேற்று) மாலை 3 மணிக்குள் உங்கள் மனுவை முன்மொழிந்து கையெழுத்திட்ட தீபன் மற்றும் சுமதி ஆகியோரை நேரில் ஆர்.கே.நகர் தேர்தல் நடத்தும் அதிகாரி வேலுச்சாமி முன் ஆஜர்படுத்தி விளக்கம் அளித்தால் உங்கள் மனு ஏற்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது” என்று அதில் கூறப்பட்டு இருந்தது. ஆனாலும் நடிகர் விஷால் நேற்று மாலை 3 மணி வரை தீபன் மற்றும் சுமதி ஆகியோரை நேரில் அழைத்து வந்து ஆஜர்படுத்தவில்லை. அதனால் விஷாலின் வேட்புமனுவை தேர்தல் ஆணையத்தால் இனி ஏற்றுக்கொள்ள முடியாது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • sabarimala11

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

  • pothumakkal_siramam1

    வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு : பொதுமக்கள் கடும் சிரமம்

  • dubai_hospitalll11

    துபாயில் ஒட்டகத்திற்கு மட்டும் சிகிச்சை அளிக்கும் வினோத மருத்துவமனை

  • Astronauts

    சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பூமி திரும்பிய விண்வெளி வீரர்கள்

  • 15-12-2017

    15-12-2017 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்