SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புதுவண்ணையில் தீவிர பிரசாரம் தொகுதி பிரச்னைகளை தீர்க்க பாடுபடுவேன்

2017-12-08@ 00:04:48

சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு திமுக வேட்பாளர் மருதுகணேஷ், புதுவண்ணாரப்பேட்டை 39வது வட்டத்துக்கு உட்பட்ட டி.எச்.ரோடு, இருசப்ப மேஸ்திரி தெரு, வெங்கடேசன் தெரு, வாசர் வரதப்பன் தெரு, புஜ்ஜியம்மாள் தெரு, பூண்டி தங்கம்மாள் தெரு, ஆவூர் முத்தையா தெரு, நாகூரார் தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடம்  நேற்று காலை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, மேளதாளம் முழங்க வேட்பாளர் மருதுகணேசுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பெண்கள் ஆரத்தி எடுத்தும் மலர் தூவியும் வரவேற்றனர்.

புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் டீக்கடை, சாலையோர உணவகங்கள், மார்க்கெட் வியாபாரிகளிடம் மருதுகணேஷ் குறைகளை கேட்டறிந்தார். அப்போது ‘‘இப்பகுதியில் குடிநீர் பதிக்கும் பணிக்காக சாலை நடுவில் பள்ளம் தோண்டப்பட்டு, பணி சரிவர முடிக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. சாலை குண்டும் குழியுமாக மாறியுள்ளதால் போக்குவரத்துக்கு சிரமம் ஏற்படுகிறது. மேலும் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு சாலையில் தேங்கி நிற்கிறது. தெருக்குழாய்களில் கழிவுநீர் கலந்து வருகிறது. தற்போது மெட்ரோ ரயில் சேவைக்காக நடக்கும் பணியால் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தி அடிப்படை வசதி செய்துதரவேண்டும்’’ என அவரிடம் மக்கள் கோரிக்கை வைத்தனர்.
இதற்கு மருதுகணேஷ், ‘‘ இதே பகுதியை சேர்ந்தவன் என்பதால் உங்கள் குறைகளை தொலைபேசி மூலமும் நேரிலும் தெரிவிக்கலாம்.

பிரச்னைகளை தீர்க்க உடனுக்குடன் தீர்க்க நடவடிக்கை எடுப்பேன். சமீபத்தில் பெய்த மழையின்போது இப்பகுதியில் ஏற்பட்ட பாதிப்புகளை திமுக நிர்வாகிகளுடன் வந்து ஆய்வு செய்து பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுத்தேன். திமுக தலைவர் கருணாநிதியும், செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும் மக்கள் பிரச்னைகளை எப்படியெல்லாம் தீர்த்து வைக்கிறார்களோ அதுபோல் அவர்களின் ஆலோசனைபடி அனைத்து பிரச்னைகளையும் தீர்க்க பாடுபடுவேன்’’. இவ்வாறு மருதுகணேஷ் கூறினார். பிரசாரத்தின்போது, முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ, திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் எ.வ.வேலு எம்எல்ஏ, கிரி எம்எல்ஏ, பகுதி துணை செயலாளர் ஆர்.டி.ராஜா, கே.பாலு மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட தலைவர் மூர்த்தி, காங்கிரஸ் மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம், விடுதலைச்சிறுத்தைகள் பகுதி செயலாளர் சவுந்தர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-10-2018

  24-10-18 இன்றைய சிறப்பு படங்கள்

 • FoamFightScotland

  முதலாம் ஆண்டு மாணவர்களை வித்தியாசமான முறையில் வரவேற்ற ஸ்காட்லாந்து பல்கலைக்கழம்: புகைப்படங்கள்

 • SALTMarchRashtrapti

  ராஷ்டிரபதி பவன் அருங்காட்சியகத்தில் புதிதாக வைக்கப்பட்டுள்ள காந்தியடிகளின் உருவ சிலைகள்: மாணவர்கள் கண்டுகளிப்பு

 • NagoroJapanVillage

  ஜப்பானில் உள்ள தீவில் வெறிச்சோடிய கிராமத்தை பொம்மைகளால் உயிரூட்டிய பெண்: குவியும் சுற்றுலா பயணிகள்

 • FallFoilageWorld

  உலகின் பல்வேறு நாடுகளில் எடுக்கப்பட்ட இலையுதிர் காலத்தின் அழகிய புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்