SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பொள்ளாச்சி அருகே காட்டுயானைகள் அட்டகாசம் 300 தென்னைகள் நாசம்

2017-12-08@ 00:04:45

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே தனியார் தோட்டத்துக்கு காட்டுயானைகள் நுழைந்து, 300 தென்னைகளை சேதப்படுத்தின. கோவை மாவட்டம்   பொள்ளாச்சியை அடுத்த சேத்துமடையில் உள்ள ஒரு தோட்டத்தில் நேற்று முன்தினம் இரவில், காட்டு யானை ஒன்று புகுந்தது. அப்போது, அங்கு தோட்டத்து வீட்டில் தங்கியிருந்த தொழிலாளி பிரபாகரன் என்ற பரமசிவம் (46), இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவர் கொடுத்த தகவலின்பேரில், வன ஊழியர்கள்  விரைந்து வந்து, தோட்டத்தில் புகுந்த ஒற்றை யானையை பட்டாசு வெடித்து வெளியேற்றினர். ஆனால் அந்த யானை, போத்தமடை ரோட்டோரத்தில் உள்ள தென்னந்தோப்பிற்குள் புகுந்தது.

அப்போது, அதே தோப்பிற்கு மற்றொரு யானை வரவே, இரண்டும் சேர்ந்து தோப்பில் இருந்த 300 தென்னைகளை துவம்சம் செய்தது. தகவலறிந்த வனத்துறையினர், யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். பட்டாசுகளை வெடித்து சுமார் இரண்டு மணிநேரம் போராடி யானைகளை காட்டிற்குள் விரட்டினர். இந்த யானைகள் மீண்டும் இடம் பெயர்ந்து வருவதை தடுக்க வனச்சரகர் தலைமையில் என 15க்கும் மேற்பட்டோர், 2 குழுக்களாக பிரிந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கோழிக்கமுத்தி முகாமில் இருந்து 4 கும்கி யானைகளை போத்தமடை ரோட்டில் உள்ள தோட்டத்திற்கு வரவழைத்தும் கண்காணித்து வருகின்றனர்.

கோயிலை உடைத்த யானை கூட்டம்: கூடலூர் அருகே காந்திநகர் பகுதியில் உள்ள அம்மன் கோயிலுக்குள் நேற்று முன்தினம் இரவு 13 யானைகள் நுழைந்தது. கோயில் வளாகத்தின் இரும்பு கிரில் மற்றும் பக்கவாட்டு சுவர்களை இடித்து சூறையாடின. பிறகு கோயிலுக்குள் சென்று பீரோ மற்றும் தளவாட பொருட்களை உடைத்து சூறையாடின. தகவலின்பேரில், வனத்துறையினர் யானை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • thaliland_boyshome

    தாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட 12 சிறுவர்களும் வீடு திரும்பினர்

  • gujaratheavyrain

    குஜராத் மாநிலம் கிர்சோம்நாத் பகுதியில் பலத்தமழை : பொதுமக்கள் பாதிப்பு

  • vintage_car_gurgaon

    பழங்குடிப் பொருட்களிலிருந்து விண்டேஜ் கார்கள் வரை... பல்வேறு வகையான கலைப்பொருட்களை உள்ளடக்கிய குர்கான்!

  • public_trans_venen

    வெனிசுலாவில் அரசு பேருந்துக்கு கடும் கிராக்கி: மக்கள் நாய் வண்டியில் ஏறிச் செல்லும் அவலம்!

  • Manilarainstorm

    பிலிப்பைன்ஸில் கனமழை மற்றும் புயல்: வெள்ளக்காடான மணிலா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்