SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பணிக்காலத்தை கணக்கிட முடியாது அரசு ஊழியருக்கு நிகராக ஓதுவார்களுக்கு சம்பளம்

2017-12-08@ 00:04:43

மதுரை:  ஓதுவார்களுக்கு, அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
 கோயிலில் ஓதுவாராக பணியாற்றுபவர்களுக்கு அரசாணைப்படி சம்பளம் வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.  இந்த மனுவை நீதிபதி ஆர்.மகாதேவன் விசாரித்தார். அறநிலையத்துறை ஆணையரின் பதில் மனுவில், ‘ஓதுவார் பணி முழுநேரப்பணியல்ல. 6 காலத்தில் 2 அல்லது 3 காலம் மட்டுமே பணியாற்றுகின்றனர். பல கோயில்களில் வருமானம் போதுமானதாக இல்லாததால்தான் அரசாணைப்படி சம்பளம் வழங்குவதில்லை’ என கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: வரலாற்றில் புகழுடன் இருந்த ஓதுவார்களின் நிலை இன்று மிகவும் மோசமாக உள்ளது. சம்பளத்திற்காக நீதிமன்றத்தை நாடியுள்ளனர். இந்த நிலையை பார்க்கும் போது மனது வலிக்கிறது. ஓதுவார்களின் நிலை கண்ணீரை வரவழைக்கிறது.  தேவாரம், திருவாசகம் மற்றும் திருமந்திரத்தை பாடுவோருக்கு அவர்களது பணியின் காலத்தை கணக்கிட முடியாது. இதர அரசு ஊழியர்களை ேபால, ஓதுவார்களையும் கருதி அவர்களுக்கு இணையான சம்பளத்தை வழங்க காலதாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • trump1_putin_met

    ட்ரம்ப் - புட்டின் சந்திப்புக்கு தொடர்ந்து வலுக்கும் எதிர்ப்பு: வெள்ளை மாளிகையில் மக்கள் போராட்டம்!

  • noida_building_collapse123

    நொய்டா அருகே அடுக்குமாடி கட்டடம் சரிந்து விழுந்து விபத்து: 3 பேர் உயிரிழப்பு

  • 18-07-2018

    18-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • YosemityNationalPark

    கலிபோர்னியாவின் யோசெமிட்டி தேசியப் பூங்கா அருகே பயங்கர காட்டுத்தீ: சுமார் 9,300 ஏக்கர் நிலம் நாசம்!

  • madhyapradeshrain

    மத்தியப்பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் கனமழை : பொதுமக்கள் கடுமையாக பாதிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்