SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மதம் மாறி திருமணம் செய்த கேரள மாணவி ஹதியா விடுப்பு கேட்டு கடிதம்

2017-12-08@ 00:04:41

சேலம்: மதம் மாறி திருமணம் செய்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் உத்தரவின் பேரில் சேலம் கல்லூரியில் படித்து வரும் கேரள மாணவி விடுப்பு கேட்டு முதல்வரிடம் கடிதம் கொடுத்துள்ளார். கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த அசோகன் மகள் அகிலா. இவர் சேலம் சித்தர் கோயில் ரோட்டில் உள்ள ஹோமியோபதி மருத்துவ கல்லூரியில் படித்து வந்தார். அப்போது, முஸ்லிமாக மதம் மாறிய இவர் தனது பெயரை ஹதியா என்று மாற்றிக்கொண்டார். இவர் ஷபின் ஜகான் என்ற வாலிபரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், அவரது தந்தை தன்னுடைய மகள் திருமணத்தை ரத்து செய்யக்கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து நீதிமன்றம் திருமணத்தை ரத்து செய்தது.

இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட் வரை சென்றது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மாணவி மருத்துவ படிப்பை அதே கல்லூரியில் தொடர அனுமதி அளித்ததுடன், அவருக்கு காப்பாளராக கல்லூரி முதல்வரை நியமித்து உத்தரவிட்டது. இதையடுத்து, கடந்த வாரம் ஹதியா மருத்துவ கல்லூரியில் சேர்ந்தார். அவருக்கு போலீசார் பாதுகாப்பு வழங்கி உள்ளனர். இந்நிலையில், தனக்கு 5 நாட்கள் விடுப்பு வேண்டும் என ஹதியா, கல்லூரி முதல்வரிடம் கடிதம் அளித்துள்ளார். இதனால் அவருக்கு விடுப்பு வழங்கலாமா? விடுப்பு அளிக்கும் பட்சத்தில் அவரது பாதுகாப்பை எவ்வாறு உறுதி செய்வது என்பது குறித்து கல்லூரி நிர்வாகம் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • thaliland_boyshome

    தாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட 12 சிறுவர்களும் வீடு திரும்பினர்

  • gujaratheavyrain

    குஜராத் மாநிலம் கிர்சோம்நாத் பகுதியில் பலத்தமழை : பொதுமக்கள் பாதிப்பு

  • vintage_car_gurgaon

    பழங்குடிப் பொருட்களிலிருந்து விண்டேஜ் கார்கள் வரை... பல்வேறு வகையான கலைப்பொருட்களை உள்ளடக்கிய குர்கான்!

  • public_trans_venen

    வெனிசுலாவில் அரசு பேருந்துக்கு கடும் கிராக்கி: மக்கள் நாய் வண்டியில் ஏறிச் செல்லும் அவலம்!

  • Manilarainstorm

    பிலிப்பைன்ஸில் கனமழை மற்றும் புயல்: வெள்ளக்காடான மணிலா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்