SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ராசிபுரம் தேர்தல் ரத்து கோரி திமுக வேட்பாளரின் வழக்கை எதிர்த்து அமைச்சர் மனு தள்ளுபடி

2017-12-08@ 00:04:39

சென்னை: கடந்தாண்டு மே மாதம் நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில், ராசிபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் சரோஜா 9,631 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் வி.பி.துரைசாமி, பண பட்டுவாடா, அதிகார துஷ்பிரயோகம் செய்து பெற்ற வெற்றியை செல்லாது என்று அறிவிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.  இந்த மனுவை விசாரித்த நீதிபதி வி.பாரதிதாசன், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி, சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா உள்ளிட்டோர் 4 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு கடந்த மாதம் உத்தரவிட்டார்.

இந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி, அத்தொகுதியில் வெற்றி பெற்று தற்போது அமைச்சராக உள்ள சரோஜா, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.  இந்த மனு நீதிபதி பாரதிதாசன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.  மனுவை எதிர்த்து வி.பி.துரைசாமி சார்பில் வக்கீல் வி.அருண் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து அமைச்சரின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், வி.பி.துரைசாமின் தேர்தல் வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி, வரும் 20ம் தேதி சரோஜா பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-10-2018

    23-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • longestseabridge

    உலகில் எங்கும் இல்லாத தனிச்சிறப்புடன் கட்டி முடிக்கப்பட்ட உலகின் நீளமான கடல் பாலம்

  • delhi_strikepetrol18

    டெல்லியில் பெட்ரோல் பங்குகள் ஸ்டிரைக்: கால் டாக்சி, ஆட்டோ சேவைகள் முடக்கம் !

  • solarcar_race

    சூரிய மின்சக்திகளால் இயங்கும் கார்களுக்கான பந்தயம் சிலி நாட்டில் கொண்டாட்டம்!

  • hondurans_americatrump

    ஹோண்டராஸில் இருந்து அமெரிக்கா நோக்கி நடைபயணம் மேற்கொள்ளும் அகதிகள் !

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்