SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகம் முழுவதும் பஸ்களில் ஒரே மாதிரியான கட்டணம் வசூலிக்க வழக்கு

2017-12-08@ 00:04:36

மதுரை: தமிழகம் முழுவதும் பஸ்களில் ஒரே மாதிரியான கட்டணம் வசூலிக்க ேகாரிய வழக்கில் அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல், நாகல் நகரை சேர்ந்த நல்லயம்பெருமாள், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தின் அனைத்து பகுதியிலும் குக்கிராமங்கள் முதல் நகரங்கள் வரைபலரது வேலை வாய்ப்பிற்கான முக்கிய காரணியாக பஸ் இயக்கம் உள்ளது. கடந்த 17.11.2011ல் பஸ் கட்டணத்தை மாற்றியமைத்து அரசு உத்தரவிட்டது.

இதன்படி அரசு பஸ்களில், திண்டுக்கல் - மதுரை கட்டணம் ரூ.18.50ல் இருந்து ரூ.28 ஆக உயர்த்தப்பட்டது. திண்டுக்கல் - தேனி இடையே ரூ.22.50ல் இருந்து ரூ.35 ஆக உயர்த்தப்பட்டது. ஆனால், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட மதுரைக்கு ரூ.5, தேனிக்கு ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. இதே நிலைதான் தனியார் பஸ்களிலும் உள்ளது. இதேபோல் கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் குறைந்தபட்ச கட்டணமான ரூ.2, ரூ.3 ஆக உயர்த்தப்பட்டது. ஆனால் பல பகுதிகளில் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.3, ரூ.4 வசூலிக்கப்படுகிறது. குறிப்பாக சென்னை, திருச்சி மற்றும் கோயம்புத்தூர் போன்ற மாநகரங்களில் கூட குறைந்தபட்ச கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் இந்த குறைந்தபட்ச கட்டணம் வசூலிக்கவில்லை.

எனவே, தமிழகம் முழுவதும் அனைத்து பஸ்களிலும் அரசாணைப்படி நிர்ணயிக்கப்பட்ட ஒரே மாதிரியான கட்டணத்தையே வசூலிக்க உத்தரவிட வேண்டும்.  இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் எம்.வேணுகோபால், ஆர்.தாரணி ஆகியோர், மனு குறித்து போக்குவரத்து துறை (அரசு பஸ்) செயலர், போக்குவரத்து கமிஷனர் (தனியார் பஸ்), உள்துறை (போக்குவரத்து) முதன்மை செயலர், அரசு போக்குவரத்து கழக மதுரை கோட்ட மேலாண் இயக்குநர் ஆகியோர் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி 4க்கு தள்ளி வைத்தனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-12-2017

    15-12-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • Ragul_Fishermen

    ஓகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி, கேரளா மீனவர்களின் குடும்பத்தினருடன் ராகுல் காந்தி சந்திப்பு

  • AnubutiShatabditrain

    விமானம் போன்ற சொகுசு வசதிகளுடன் கூடிய அனுபூதி பெட்டி: சதாப்தி ரயில்களில் இயக்க ரயில்வே திட்டம்

  • JamaMasjid_Crack

    361 ஆண்டுகள் பழமையான ஜமா மசூதியில் விரிசல்: விரைவில் சீரமைக்க ஆர்வலர்கள் கோரிக்கை

  • PeriyaPandian_Homage

    காவல் ஆய்வாளர் பெரியபாண்டி உடல் சென்னை வந்தடைந்தது: கறுப்புப்பட்டை அணிந்து தலைவர்கள், அதிகாரிகள் இறுதி அஞ்சலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்