SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

20 ஆண்டுகளாக சிகிச்சை கலெக்டர் ஆய்வில் சிக்கிய போலி டாக்டர் கைது

2017-12-08@ 00:04:34

விக்கிரவாண்டி: விழுப்புரம் கலெக்டர் ஆய்வின் போது, 20 ஆண்டுகளாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த போலி டாக்டர் சிக்கினார். அவரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஒன்றியம் சிந்தாமணி கிராமத்தில் சுகாதார பணி மற்றும் டெங்கு கொசு ஒழிப்பு பணி நேற்று காலை நடந்தது. மாவட்ட கலெக்டர் சுப்ரமணியன் பணிகளை ஆய்வு செய்தார். மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, விழுப்புரம் சுகாதார பணிகள் துணை இயக்குநர் சவுண்டம்மாள், மாவட்ட திட்ட இயக்குநர் மகேந்திரன் உள்ளிட்டோர் உடன் சென்றனர். கிராமத்தில் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து கொண்டிருந்தபோது அங்கிருந்த கிளினிக் ஒன்றில் நோயாளிகள் சிகிச்சைக்காக காத்திருந்தனர்.

சந்தேகத்தின் பேரில் கிளினிக் உள்ளே சென்று டாக்டரிடம் கலெக்டர் விசாரணை நடத்தினார். அப்போது அவர் போலி டாக்டர் என்பது தெரியவந்தது. விசாரணையில் அவர் மயிலம் ஒன்றியம் ஏழாயி கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் கென்னடி(60) என்பதும், ஏற்கனவே மருத்துவ பிரதிநிதியாக இருந்தவர், தற்போது எம்பிபிஎஸ், எம்டி படித்த அலோபதி மருத்துவர் எனக்கூறி பொதுமக்களுக்கு கடந்த 20 வருடங்களாக சிகிச்சை அளித்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து கலெக்டர் உத்தரவின்பேரில் ராஜ்குமார் கென்னடியை சுகாதார பணிகள் இணை இயக்குனர் பியர்லின் மேபல் ரூபமதி, விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். பின்னர் போலீசார் அவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-10-2018

    24-10-18 இன்றைய சிறப்பு படங்கள்

  • FoamFightScotland

    முதலாம் ஆண்டு மாணவர்களை வித்தியாசமான முறையில் வரவேற்ற ஸ்காட்லாந்து பல்கலைக்கழம்: புகைப்படங்கள்

  • SALTMarchRashtrapti

    ராஷ்டிரபதி பவன் அருங்காட்சியகத்தில் புதிதாக வைக்கப்பட்டுள்ள காந்தியடிகளின் உருவ சிலைகள்: மாணவர்கள் கண்டுகளிப்பு

  • NagoroJapanVillage

    ஜப்பானில் உள்ள தீவில் வெறிச்சோடிய கிராமத்தை பொம்மைகளால் உயிரூட்டிய பெண்: குவியும் சுற்றுலா பயணிகள்

  • FallFoilageWorld

    உலகின் பல்வேறு நாடுகளில் எடுக்கப்பட்ட இலையுதிர் காலத்தின் அழகிய புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்