SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருச்சி அருகே பயங்கர விபத்து 10 பேர் பலிக்கு வேன் டிரைவரே காரணம்

2017-12-08@ 00:04:32

திருச்சி:  கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த 15 பேர்,  டெம்போ டிராவலர் வேனில் திருப்பதிக்கு நேற்று முன்தினம்  புறப்பட்டனர். வேனில் டிரைவர், 7 பெண்கள், 5 ஆண்கள், ஒரு சிறுவன், ஒரு சிறுமி ஆகியோர் இருந்தனர்.  இரவு 10.45 மணிக்கு திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் தேசிய நெடுஞ்சாலையில் மோரணிமலையை கடந்து சர்வீஸ் ரோட்டுக்குள் திரும்பியது. அப்போது அங்கு போர்வெல் லாரி ஒன்றை டிரைவர் சந்திரசேகரன் நிறுத்திக்கொண்டிருந்தார். அந்த லாரியின் பின்புறம் வேகமாக வந்த வேன் பயங்கரமாக மோதியது.  வேனில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி மரண ஓலமிட்டனர்.  சத்தம் கேட்டு அருகில் உள்ள துவரங்குறிச்சி அரசு போக்குவரத்து கழக டெப்போவில் இருந்து ஊழியர்கள் ஓடிவந்தனர். ேமலும், துவரங்குறிச்சி போலீஸ் மற்றும் தீயணைப்பு படையினரும் விரைந்து வந்தனர். பின்னர், ஜேசிபி எந்திரம் வரவைத்து வேனை உடைத்து மீட்பு பணியை தொடங்கினர்.

இதில், வைத்திலிங்கம் (79), இவரது  மனைவி புஷ்பகலா(68), மகன் ஈஸ்வரன்(38), மருமகள்  நீலா(25),  ஐயப்பன்(52), இவரது மனைவி சொர்ணா என்கிற வேலம்மாள்(48), கீழத்தெருவைச் சேர்ந்த நடராஜன்(45), இவரது மகள் ஜெயசந்தியா(10), புன்னார்குளத்தை சேர்ந்த சங்கரகுமார்(44), இவரது மகன் நந்தீஸ்(5) ஆகிய 10 பேரை சடலமாக மீட்டனர். ஐயப்பன் மகள் வைஷ்ணவி(20), நடராஜன் மனைவி தானம்மாள்(43), இறந்த  சங்கரகுமார் மனைவி வேலாதேவி(35), இவர்களது மகன் கார்த்திக்(12), டிரைவர்   தோவாளையை சேர்ந்த ராகேஷ் ஆகிய 5 பேரும்  படுகாயமடைந்தனர். இவர்கள்,  திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.

பலியான  10 பேரின் உடல்களும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காட்ட உறவினர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் ேநற்று காலை திருச்சி அரசு மருத்துவமனைக்கு வந்து உடல்களை பார்த்து கதறி அழுதனர். பின்னர், 12 மணிக்கு 10 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. முன்னதாக, மருத்துவமனையில் காயமடைந்தவர்ளுக்கும் உறவினர்களுக்கும் திருச்சி கலெக்டர் ராசாமணி ஆறுதல் கூறினார்.

இதன்பின் அவர் கூறும்போது, வேன்  டிரைவரின் கவனக்குறைவால் விபத்து நடந்துள்ளது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து வேகமாக வந்ததால் விபத்து நடந்ததா அல்லது கவனக்குறைவாக  சர்வீஸ் சாலையில் வேன் திடீரென திருப்பியதால் விபத்து நடந்தா என போலீசார் விசாரிக்கிறார்கள். இறந்தவர்களின் குடும்ப சூழ்நிலை அறிந்து அரசின் நிவாரணம் வழங்க  நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்தார். விபத்து குறித்து துவரங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து  லாரி டிரைவர்   சந்திரசேகரை கைது செய்தனர். இவர் நாமக்கல் மாவட்டம்  பனங்காட்டுபாளையம் கிராமத்தை சேர்ந்தவர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-10-2018

  24-10-18 இன்றைய சிறப்பு படங்கள்

 • FoamFightScotland

  முதலாம் ஆண்டு மாணவர்களை வித்தியாசமான முறையில் வரவேற்ற ஸ்காட்லாந்து பல்கலைக்கழம்: புகைப்படங்கள்

 • SALTMarchRashtrapti

  ராஷ்டிரபதி பவன் அருங்காட்சியகத்தில் புதிதாக வைக்கப்பட்டுள்ள காந்தியடிகளின் உருவ சிலைகள்: மாணவர்கள் கண்டுகளிப்பு

 • NagoroJapanVillage

  ஜப்பானில் உள்ள தீவில் வெறிச்சோடிய கிராமத்தை பொம்மைகளால் உயிரூட்டிய பெண்: குவியும் சுற்றுலா பயணிகள்

 • FallFoilageWorld

  உலகின் பல்வேறு நாடுகளில் எடுக்கப்பட்ட இலையுதிர் காலத்தின் அழகிய புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்