SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கார் கவிழ்ந்து டி.டி.வி ஆதரவாளர் புகழேந்தி படுகாயம்

2017-12-08@ 00:04:30

திண்டுக்கல்: கார் பாலத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் டி.டி.வி.தினகரனின் தீவிர ஆதரவாளரான புகழேந்தி படுகாயமடைந்தார். டி.டி.வி.தினகரனின் தீவிர ஆதரவாளர் புகழேந்தி. கர்நாடக மாநில செயலாளர். இவர் நேற்று பெங்களூரில் இருந்து திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் நடந்த தினகரன் ஆதரவாளரான நல்லசாமி மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக காரில் நண்பர் ஜெயராஜூடன் சென்றார். டிரைவர் மேத்யூ காரை ஓட்டி சென்றார். மாலை 5 மணியளவில் கார் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தை கடந்து மேம்பால திருப்பத்தில் சென்றபோது, எதிர்பாராவிதமாக பக்கவாட்டுச்சுவரில் மோதி கவிழ்ந்தது.

இதில் புகழேந்தியின் கைகளில் எலும்பு முறிவு ஏற்பட்டது. கழுத்து, தோள்பட்டையிலும் பலமாக அடிபட்டது. டிரைவர் மேத்யூ, நண்பர் ஜெயராஜ் ஆகியோருக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் மூவரையும் மீட்டு  தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புகழேந்தி உட்பட 3 பேரும் கோவையில் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • thaliland_boyshome

    தாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட 12 சிறுவர்களும் வீடு திரும்பினர்

  • gujaratheavyrain

    குஜராத் மாநிலம் கிர்சோம்நாத் பகுதியில் பலத்தமழை : பொதுமக்கள் பாதிப்பு

  • vintage_car_gurgaon

    பழங்குடிப் பொருட்களிலிருந்து விண்டேஜ் கார்கள் வரை... பல்வேறு வகையான கலைப்பொருட்களை உள்ளடக்கிய குர்கான்!

  • public_trans_venen

    வெனிசுலாவில் அரசு பேருந்துக்கு கடும் கிராக்கி: மக்கள் நாய் வண்டியில் ஏறிச் செல்லும் அவலம்!

  • Manilarainstorm

    பிலிப்பைன்ஸில் கனமழை மற்றும் புயல்: வெள்ளக்காடான மணிலா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்