SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விவசாயிகளிடம் மாற்றாந்தாய் மனப்பான்மையில் நடப்பது ஏன்?

2017-12-08@ 00:04:27

புதுடெல்லி: ‘விவசாயிகள் பிரச்னையில் பிரதமர் மோடி மாற்றந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்வது ஏன்?’ என்று ராகுல் காந்தி கேட்டுள்ளார்.
குஜராத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடிக்கு தனது டிவிட்டர் பக்கத்தின் மூலம் தினமும் ஒரு கேள்வியை கேட்டு வருகிறார். நேற்று தனது 9வது கேள்வியை கேட்டார். இது தொடர்பாக ராகுல் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடியும் இல்லை, உற்பத்திக்கு தகுந்த விலை வழங்கப்படவில்லை, பயிர் காப்பீடு பலன்களும் கிடைக்கவில்லை. குழாய் கிணறுகளும் அமைக்கப்படவில்லை.  விவசாயம் கபார் சிங்கால் பாதிக்கப்பட்டுள்ளது. நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, விவசாயிகள் பயனற்றவர்கள் ஆக்கப்பட்டுள்ளனர். விவசாயிகளிடம் பிரதமர் மாற்றாந்தாய் மனப்போக்குடன் நடந்து கொள்வது ஏன்?’ என்று கேட்டுள்ளார்.

14ம் தேதி பார்வை: கேரளாவில் ஓகி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி வரும் 14ம் தேதி பார்வையிடுகிறார்.  தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தை புரட்டி போட்ட ஓகி புயல், கேரள மாநிலத்தையும் விட்டுவைக்கவில்லை. திருவனந்தபுரம், கொச்சி, பத்தனம்திட்ட உள்ளிட்ட பகுதிகளில் கடும் பாதிப்புக்களை ஏற்படுத்தியது. இந்நிலையில்,  திருவனந்தபுரத்தில் கேரள எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா நிருபர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், “ வரும் 14ம் தேதி காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட வருகிறார். மாநில அரசு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தவறி விட்டது. புயல் குறித்து மீனவர்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை. உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு நிவாரணத்தொகை மாநில அரசு உயர்த்தி வழங்கவேண்டும்”  என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-10-2018

    24-10-18 இன்றைய சிறப்பு படங்கள்

  • FoamFightScotland

    முதலாம் ஆண்டு மாணவர்களை வித்தியாசமான முறையில் வரவேற்ற ஸ்காட்லாந்து பல்கலைக்கழம்: புகைப்படங்கள்

  • SALTMarchRashtrapti

    ராஷ்டிரபதி பவன் அருங்காட்சியகத்தில் புதிதாக வைக்கப்பட்டுள்ள காந்தியடிகளின் உருவ சிலைகள்: மாணவர்கள் கண்டுகளிப்பு

  • NagoroJapanVillage

    ஜப்பானில் உள்ள தீவில் வெறிச்சோடிய கிராமத்தை பொம்மைகளால் உயிரூட்டிய பெண்: குவியும் சுற்றுலா பயணிகள்

  • FallFoilageWorld

    உலகின் பல்வேறு நாடுகளில் எடுக்கப்பட்ட இலையுதிர் காலத்தின் அழகிய புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்