SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காஷ்மீரில் நிலநடுக்கம்

2017-12-08@ 00:04:25

ஸ்ரீநகர்: காஷ்மீரின் லடாக் பகுதியில் நேற்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 5.4 புள்ளிகளாக பதிவானது.  தலைநகர் டெல்லி மற்றும் உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் நேற்று முன்தினம் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள இந்திய- சீன எல்லையில் நேற்று அதிகாலை 4.59 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. லடாக் பகுதியை மையமாக கொண்டு 35 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலநடுக்கம் காஷ்மீரின் பல பகுதிகளிலும் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.4 புள்ளிகளாக பதிவாகியிருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடியாக எந்த தகவலும் கிடைக்கவில்லை. 

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • thaliland_boyshome

    தாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட 12 சிறுவர்களும் வீடு திரும்பினர்

  • gujaratheavyrain

    குஜராத் மாநிலம் கிர்சோம்நாத் பகுதியில் பலத்தமழை : பொதுமக்கள் பாதிப்பு

  • vintage_car_gurgaon

    பழங்குடிப் பொருட்களிலிருந்து விண்டேஜ் கார்கள் வரை... பல்வேறு வகையான கலைப்பொருட்களை உள்ளடக்கிய குர்கான்!

  • public_trans_venen

    வெனிசுலாவில் அரசு பேருந்துக்கு கடும் கிராக்கி: மக்கள் நாய் வண்டியில் ஏறிச் செல்லும் அவலம்!

  • Manilarainstorm

    பிலிப்பைன்ஸில் கனமழை மற்றும் புயல்: வெள்ளக்காடான மணிலா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்