SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மைசூரு இளவரசிக்கு ஆண் குழந்தை பிறந்தது

2017-12-08@ 00:04:20

பெங்களூரு: மைசூரு மன்னர் வம்சத்தில்  தத்தெடுக்கும் வாரிசுகளுக்குதான்  பட்டம் சூட்டப்பட்டு வருகிறது.  நரசிம்மராஜ உடையார் மரணத்திற்கு பிறகு மன்னர் குடும்ப வாரிசு யார் என்ற  கேள்வி எழுந்தபோது, நரசிம்மராஜ உடையாரின் சகோதரி மகன் யதுவீராவை  பிரமோதாதேவி தத்தெடுத்து கடந்த இரண்டாண்டுக்கு முன் வாரிசாக பட்டம்  சூட்டினார். அதை தொடர்ந்து ராஜஸ்தான் மன்னர் குடும்பத்தை சேர்ந்த  திரிஷிகாவை யதுவீராவுக்கு ஒன்றரை ஆண்டுக்கு முன் திருமணம் செய்து வைத்தார்.  

இந்த தம்பதிக்கு நேற்று முன்தினம் இரவு ஆண் குழந்தை பிறந்தது.  இதை  மன்னர் குடும்பத்தினர் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகிறார்கள். மைசூரு அரண்மனை  விழாக்கோலம் பூண்டுள்ளது. மேலும் அரண்மனை வளாகத்தில் அலமேலம்மாவுக்கு  கட்டியுள்ள கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தினர்.
இந்நிலையில்  யதுவீரா-திரிஷிகா தம்பதியருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதால், யது  வம்சத்திற்கு அலமேலம்மா விட்ட சாபம் நீங்கியதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

அது என்ன சாபம்?
ஸ்ரீரங்கபட்டணாவை ஸ்ரீரங்கராயா ஆட்சி செய்தார். நோய் தீர்வதற்காக மனைவி அலமேலம்மாவுடன் ஸ்ரீரங்கராயர் தலகாட்டிற்கு சென்றார். அதை அறிந்த மைசூரு உடையார் மன்னர், ஸ்ரீரங்கபட்டணா மீது போர் தொடுத்து தன் வசப்படுத்தினார். தகவல் கிடைத்து ஸ்ரீரங்கராயர் இறந்தார். சோகத்திலிருந்த அலமேலம்மாளிடம்  ஆபரணங்களை பறித்து வர படை வீரர்களை உடையார் மன்னர் அனுப்பி வைத்தார். இதில் கோபம் கொண்ட அலமேலம்மா ‘‘தலகாடு மண்ணாகட்டும், நதி குட்டையாகட்டும், மைசூரு மன்னருக்கு வாரிசுகள் இல்லாமல் போகட்டும்’’ என்று சாபமிட்டு காவிரி ஆற்றில் குதித்து உயிர் துறந்தார். இந்த சாபத்தினால் மைசூரு மன்னருக்கு ஆண் வாரிசு இல்லாமல் போனதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-10-2018

    24-10-18 இன்றைய சிறப்பு படங்கள்

  • FoamFightScotland

    முதலாம் ஆண்டு மாணவர்களை வித்தியாசமான முறையில் வரவேற்ற ஸ்காட்லாந்து பல்கலைக்கழம்: புகைப்படங்கள்

  • SALTMarchRashtrapti

    ராஷ்டிரபதி பவன் அருங்காட்சியகத்தில் புதிதாக வைக்கப்பட்டுள்ள காந்தியடிகளின் உருவ சிலைகள்: மாணவர்கள் கண்டுகளிப்பு

  • NagoroJapanVillage

    ஜப்பானில் உள்ள தீவில் வெறிச்சோடிய கிராமத்தை பொம்மைகளால் உயிரூட்டிய பெண்: குவியும் சுற்றுலா பயணிகள்

  • FallFoilageWorld

    உலகின் பல்வேறு நாடுகளில் எடுக்கப்பட்ட இலையுதிர் காலத்தின் அழகிய புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்