SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாட்டுக்கு அளித்த பங்களிப்பை மறைத்துவிட்டு ஓட்டுக்காகத்தான் அம்பேத்கரை கட்சிகள் பயன்படுத்துகின்றன

2017-12-08@ 00:04:18

புதுடெல்லி: ‘‘ஓட்டுக்காகத்தான் அம்பேத்கரை அரசியல் கட்சிகள் பயன்படுத்தி வருகின்றன’’ என்று பிரதமர் மோடி பேசினார். டெல்லி ஜன்பத்தில் உள்ள அம்பேத்கர் சர்வதேச மையத்தையும், அம்பேத்கரின் உருவ சிலையையும் பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: தேசத்தை கட்டமைத்ததில் அம்பேத்கரின் பங்கு முக்கியமானது. வரலாற்றில் அவரது பாத்திரத்தை குறைத்து மதிப்பிடுவற்கு உட்படுத்தும் முயற்சிகள் இருந்தன, ஆனால், அத்தகைய முயற்சிகள் வெற்றி அடையவில்லை. அவரது பாத்திரத்தை அழிக்க நடந்த முயற்சிகளும் தோல்வியில் தான் முடிந்தன.

ஆனால் சில அரசியல் கட்சிகள் அம்பேத்கர் பெயரை சொல்லி ஓட்டு கேட்டு வருகிறார்கள். அவர்கள் தான் அம்பேத்கர் இந்த நாட்டிற்கு அளித்த பங்களிப்பு பற்றிய வரலாற்றை அழிக்க முயன்றார்கள். இன்றைய இளைஞர்கள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. அவர்களது சிந்தனை மாறுபட்டுள்ளது. சமூகத்திற்கு எதிரான நோய்கள் விரைவில் அகலும் என்ற நம்பிக்கை எனக்கு பிறந்துள்ளது. இவ்வாறு மோடி பேசினார்.

‘அம்பேத்கரை விட சிவனை அதிகமாக நினைக்கிறார்கள்’

அம்பேத்கர் விழாவில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்தார். நான் சிவபக்தன் என்று ராகுல் கூறியதை வைத்து மோடி விமர்சித்து பேசியதாவது:அம்பேத்கர் பெயரை சொல்லி சில அரசியல் கட்சிகள் ஓட்டு கேட்டு வருகிறார்கள். ஆனால், அவரது திட்டங்கள் எவையெல்லாம் நிலுவையில் உள்ளன என்பது கூட அவர்களுக்கு தெரியாது. இவர்கள் எல்லாம் ஒரு அரசியல்கட்சியின் தலைமை பதவிக்கு வர உள்ளனர். இப்போது வித்தியாசமாக அம்பேத்கரை விட சிவனை அதிகமாக நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். இருந்தாலும் பரவாயில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • thaliland_boyshome

    தாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட 12 சிறுவர்களும் வீடு திரும்பினர்

  • gujaratheavyrain

    குஜராத் மாநிலம் கிர்சோம்நாத் பகுதியில் பலத்தமழை : பொதுமக்கள் பாதிப்பு

  • vintage_car_gurgaon

    பழங்குடிப் பொருட்களிலிருந்து விண்டேஜ் கார்கள் வரை... பல்வேறு வகையான கலைப்பொருட்களை உள்ளடக்கிய குர்கான்!

  • public_trans_venen

    வெனிசுலாவில் அரசு பேருந்துக்கு கடும் கிராக்கி: மக்கள் நாய் வண்டியில் ஏறிச் செல்லும் அவலம்!

  • Manilarainstorm

    பிலிப்பைன்ஸில் கனமழை மற்றும் புயல்: வெள்ளக்காடான மணிலா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்