SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரதமருக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டு மணிசங்கர் அய்யரை சஸ்பெண்ட் செய்தது காங்.

2017-12-08@ 00:04:16

புதுடெல்லி: பிரதமர் மோடியை இழிவான நபர் என காங்கிரஸ் மூத்த தலைவர் மணி சங்கர் அய்யர் குற்றம்சாட்டினார். இதையடுத்து அவரை காங்கிரஸ் நேற்றிரவு சஸ்பெண்ட் செய்தது. டெல்லியில் அம்பேத்கர் சிலை திறப்பு நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ‘‘ஓட்டுக்காக மட்டும் அம்பேத்கர் பெயரை பயன்படுத்தும் காங்கிரஸ் கட்சி, அவரது பங்களிப்பை அழிக்க முயற்சிக்கிறது’’ என குறிப்பிட்டார். இதற்கு கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர், ‘‘இது போன்ற நிகழ்சிகளில் இழிவான அரசியல் எதற்கு? மோடி இழிவான நபர். அவரிடம் நாகரீகம் இல்லை’’ என்றார். மணி சங்கரின் இந்த கருத்துக்கு குஜராத்தின் சூரத் நகரில் பதில் அளித்த பிரதமர் மோடி, ‘‘மணி சங்கர் அய்யரின் கருத்து குஜராத்தை அவமதிப்பது போன்றது. இது சிலரின் மனோபாவம். இந்த கருத்துக்கு பா.ஜ தொண்டர்கள் யாரும் பதில் அளிக்க வேண்டாம்’’ என்றார்.

இந்த விவகாரம் குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, ‘காங்கிரஸ் கட்சியை பா.ஜ.வும், பிரதமரும் மிக மோசமாக தாக்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால், காங்கிரசின் கலாசாரம், பாரம்பரியம் வேறு. பிரதமர் மோடி பற்றி மணிசங்கர் தெரிவித்த கருத்தை நான் ஆதரிக்கவில்லை. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியும், நானும் எதிர்பார்க்கிறோம்’ என குறிப்பிட்டுள்ளார். எனினும் மணி சங்கர் அய்யர் மன்னிப்பு கேட்கா ததால் நேற்றிரவு அவரை சஸ்பெ ண்ட் செய்து காங்கிரஸ் உத்தரவிட்டது.

குஜராத் முதல்கட்ட பிரசாரம் முடிவு
குஜராத்தில் மொத்தமுள்ள 182 சட்டப்பேரவை தொகுதிகளில் 89 தொகுதிகளில் நாளை முதல் கட்ட தேர்தல் நடக்கிறது. இங்கு தேர்தல் பிரசாரம் நேற்றுடன் முடிந்தது. இதுவரை பிரதமர் மோடி 14 இடங்களில்  பிரசாரம் செய்துள்ளார். பல்ேவறு கட்சிகளைச் சேர்ந்த 977 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் 57 பேர் பெண்கள். மொத்தம் 24,689 வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் நடக்கிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-12-2017

    15-12-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • Ragul_Fishermen

    ஓகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி, கேரளா மீனவர்களின் குடும்பத்தினருடன் ராகுல் காந்தி சந்திப்பு

  • AnubutiShatabditrain

    விமானம் போன்ற சொகுசு வசதிகளுடன் கூடிய அனுபூதி பெட்டி: சதாப்தி ரயில்களில் இயக்க ரயில்வே திட்டம்

  • JamaMasjid_Crack

    361 ஆண்டுகள் பழமையான ஜமா மசூதியில் விரிசல்: விரைவில் சீரமைக்க ஆர்வலர்கள் கோரிக்கை

  • PeriyaPandian_Homage

    காவல் ஆய்வாளர் பெரியபாண்டி உடல் சென்னை வந்தடைந்தது: கறுப்புப்பட்டை அணிந்து தலைவர்கள், அதிகாரிகள் இறுதி அஞ்சலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்