SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்: ஆதார் எண் இணைப்பு கெடு மார்ச் 31 வரை நீட்டிக்க தயார்

2017-12-08@ 00:04:13

புதுடெல்லி: வங்கி கணக்கு, பான் கார்டுடன் ஆதாரை இணைப்பதற்கான கெடு மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்க தயார் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்கான அரசாணை இன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆதார் கட்டாயமாக்கப்படுவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்நிலையில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா முன்பு மனுதாரர்கள் தரப்பிலான வக்கீல்கள் நேற்று ஆஜராகி, ஆதார் கட்டாயத்திற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும், ஆதாரை இணைக்காதவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளக்கூடாது, அரசியல் சாசன அமர்வு விரைவில் அமைக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

அப்போது மத்திய அரசு தரப்பில் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் ஆஜராகி, ‘‘ஆதாருக்கு தடை விதிப்பது இயலாத காரியம். அரசின் பல்வேறு சேவைகள் மற்றும் திட்டங்களுக்கு ஆதார் கட்டாயத்திற்கான கெடுவை அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்க தயாராக உள்ளோம். ஆனால், மொபைல் எண் விஷயத்தில் அதற்கான கெடுவை நீட்டிப்பதில் சாத்தியமில்லை’’ என்றார். இதைக்கேட்ட தலைமை நீதிபதி தனது உத்தரவில்,” மத்திய அரசின் திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என்பதற்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும் அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

இதற்கான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அமைக்கப்படும். அதில் ஆதார் எண்ணிற்கு இடைக்கால உத்தரவு பிறப்பிப்பது தொடர்பான கோணத்திலும் நீதிபதிகள் விசாரணையை மேற்கொள்வார்கள்’’ என்றார்.இதைத்தொடர்ந்து, ஆதார் இணைப்பு கெடு நீட்டிப்புக்கான அதிகாரப்பூர்வ அரசாணை இன்று வெளியாகும் என தகவல்கள் கூறப்படுகிறது. இணைக்காவிட்டால் என்ன நடவடிக்கை?    டிச.31    வங்கி கணக்கு முடக்கப்படும் , பான் எண்    டிச.31    ரிட்டன் தாக்கல் முடங்கும்,மியூட்சுவல் பண்ட்    டிச.31    கணக்கு செயல்பாடு நிறுத்தப்படும்இன்சூரன்ஸ்    டிச.31    இன்சூரன்ஸ் பாலிசி முடக்கப்படும் தபால் துறை கணக்கு    டிச.31    கணக்குகள் முடக்கப்படும்,மொபைல் எண்    பிப்.6    சேவை நிறுத்தப்படும்
‘மாற்றம் இல்லை’ : ஆதார் எண் வழங்கும் உதய் (UIDAI) நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ‘‘ஆதார் இணைப்பு கெடுவில் இதுவரை எந்த மாற்றமும் அதிகாரப்பூர்வமாக செய்யப்படவில்லை. ஆதாருக்கு தடை விதிக்கப்பட்டவதாக வெளியான வீடியோ 2015ல் பதிவு செய்யப்பட்டது. அப்போதைய உச்ச நீதிமன்ற உத்தரவு அது. எனவே, வீடியோ பதிவில் கூறப்படுபவை சட்டப்படி தற்போது பொருந்தாது’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-12-2017

    15-12-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • Ragul_Fishermen

    ஓகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி, கேரளா மீனவர்களின் குடும்பத்தினருடன் ராகுல் காந்தி சந்திப்பு

  • AnubutiShatabditrain

    விமானம் போன்ற சொகுசு வசதிகளுடன் கூடிய அனுபூதி பெட்டி: சதாப்தி ரயில்களில் இயக்க ரயில்வே திட்டம்

  • JamaMasjid_Crack

    361 ஆண்டுகள் பழமையான ஜமா மசூதியில் விரிசல்: விரைவில் சீரமைக்க ஆர்வலர்கள் கோரிக்கை

  • PeriyaPandian_Homage

    காவல் ஆய்வாளர் பெரியபாண்டி உடல் சென்னை வந்தடைந்தது: கறுப்புப்பட்டை அணிந்து தலைவர்கள், அதிகாரிகள் இறுதி அஞ்சலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்