SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

போரூரில் நகைக் கடையுடன் கூடிய சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் திறப்பு

2017-12-08@ 00:04:05

சென்னை:    ஜவுளி மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனையில் முத்திரை பதித்து வரும் சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ், 4வது மெகா ஷோரூம் திறப்பு விழா போரூரில் நேற்று நடந்தது.  ரேவதி ராஜரத்தினம் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். லட்சுமி அம்மாள் ரிப்பன் வெட்டி, ஷோரூமை திறந்து வைத்தார். ஜவுளி மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் விற்பனையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் முதன்முறையாக போரூரில் டெக்ஸ்டைல்ஸ் மற்றும் நகைக்கடை இணைந்த மெகா சூப்பர் ஸ்டோராக திறக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் விரும்பும் ஆபரணங்களில் தூய தங்கத்தில், துல்லியமான, நேர்த்தியான டிசைன்களில் வடிவமைக்கப்பட்ட உயர்தர, எழில்மிகு ஜொலிப்புடன் தங்கம் மற்றும் வைர நகைகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. மெகா ஷோரூம் திறப்பு விழாவை ஒட்டி வருகிற 11ம் தேதி வரை தங்கத்தின் சந்தை விலையைவிட சவரனுக்கு 1000 குறைவாக, அதாவது ஒரு கிராமுக்கு 125 சலுகையாக வழங்கப்படுகிறது.  

சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனர் ராஜரத்தினம் கூறுகையில், ‘‘வாடிக்கையாளர்களை நேரில் சந்திக்கும்போது, ‘‘எப்போது நகைக்கடையை தொடங்குவீர்கள்?’’ என்று கேட்பார்கள். அவர்களது  விருப்பம் மற்றும் தேவையை நிறைவேற்றும் தருணம் தற்போது வந்துள்ளது. வருங்காலங்களில் ஒருங்கிணைந்த நகைக்கடை திறக்கப்படும்’’ என்றார். 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • sabarimala11

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

  • pothumakkal_siramam1

    வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு : பொதுமக்கள் கடும் சிரமம்

  • dubai_hospitalll11

    துபாயில் ஒட்டகத்திற்கு மட்டும் சிகிச்சை அளிக்கும் வினோத மருத்துவமனை

  • Astronauts

    சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பூமி திரும்பிய விண்வெளி வீரர்கள்

  • 15-12-2017

    15-12-2017 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்