SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகத்தில் மிதமான மழை காற்றழுத்தம் வடக்கு நோக்கி நகர்கிறது

2017-12-08@ 00:03:26

சென்னை:   வங்கக் கடலில் தென்கிழக்கு பகுதியில் கடந்த வாரம் ஒரு காற்றழுத்தம் உருவானது. அது தற்போது வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு  மண்டலமாக மாறியுள்ளது. இது வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரத்திற்கு நெருங்கி வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால் தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழகத்தில் தொடர்ச்சியாக மழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்  புயலாக மாறுவதற்கான வாய்ப்பு குறைவாக இருந்த போதிலும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதியில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலை  மேலும் வலுப்பெற்று வடக்கு மற்றும் வட மேற்கு திசையில் மணிக்கு 20 கிமீ வேகத்தில் நகரத்தொடங்கியது.   அந்தமான் மற்றும் தெற்கு மியான்மரை ஒட்டிய மத்திய வங்கக் கடல் பகுதிக்கு சென்றது. மேலும் மசூலிப்பட்டினத்துக்கு கிழக்கு மற்றும் தென்கிழக்கு திசையில் 850 கிமீ தொலைவில் மையம் கொண்டது. அத்துடன் மேலும் வலுப்பெற்று தீவிரக் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.

இதையடுத்து, அது நாளை காலை தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திரா இடையே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி கரையை கடக்கும் போது தீவிர காற்றழுத்த மண்டலமாக அல்லாமல் வலு குறைந்து கரையை கடக்கும். இந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக வடக்கு அந்தமான் பகுதியில் மழை பெய்யும். ஆந்திராவிலும் சில இடங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும். கடலில் காற்றின் வேகம் மணிக்கு 45 கிமீ வேகத்தில் இருந்து 55 கிமீ வரை வீசும் என்பதால் கடலில் சீற்றம் காணப்படும்.

அதிகபட்சமாக மணிக்கு 60 கிமீ வேகத்தில் காற்று வீசும். இதனால் ஆந்திரா மற்றும் ஒடிசா பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர். தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் மத்திய வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டு இருப்பதைக் காட்டும் வகையில் தமிழக கடலோர துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு 1ம் எண் ஏற்றப்பட்டுள்ளது. இந்த தீவிர காற்றழுத்தம் ஆந்திராவை நெருங்கி வரும் போது வட தமிழகத்தில் சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-10-2018

    24-10-18 இன்றைய சிறப்பு படங்கள்

  • FoamFightScotland

    முதலாம் ஆண்டு மாணவர்களை வித்தியாசமான முறையில் வரவேற்ற ஸ்காட்லாந்து பல்கலைக்கழம்: புகைப்படங்கள்

  • SALTMarchRashtrapti

    ராஷ்டிரபதி பவன் அருங்காட்சியகத்தில் புதிதாக வைக்கப்பட்டுள்ள காந்தியடிகளின் உருவ சிலைகள்: மாணவர்கள் கண்டுகளிப்பு

  • NagoroJapanVillage

    ஜப்பானில் உள்ள தீவில் வெறிச்சோடிய கிராமத்தை பொம்மைகளால் உயிரூட்டிய பெண்: குவியும் சுற்றுலா பயணிகள்

  • FallFoilageWorld

    உலகின் பல்வேறு நாடுகளில் எடுக்கப்பட்ட இலையுதிர் காலத்தின் அழகிய புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்