SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திமுக வெற்றியை தடுக்க ஆர்.கே. நகர் தேர்தலை நிறுத்த சதி

2017-12-08@ 00:03:05

சென்னை: திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று கொளத்தூர் தொகுதியில் பல்வேறு திட்டப் பணிகள் நடைபெறும் 8 இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். திக்காகுளம் பகுதி சலவைத் தொழிலாளர் குடியிருப்பில் ஆய்வுப் பணிகளை மேற் கொண்டார். மடுமாநகர் நடுநிலைப்பள்ளி நூலகத்துக்கு 400 புத்தகங்கள், 2 கணினி, ஒரு மடிக்கணினி, 350 ஜியாமெட்ரி பாக்ஸ் உள்ளிட்ட உபகரணங்களை வழங்கினார். ஒற்றைவாடை தெருவில் பழுதடைந்த குடிநீர் குழாயை மாற்றி புதிய குடிநீர் குழாயை அமைக்கும் பணியை பார்வையிட்ட அவர், தணிகாசலம் நகர் முதல் மாதவரம் நெடுஞ்சாலையை இணைக்கும் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணியையும் பார்வையிட்டார். எம்.எல்.ஏ.க்கள் சேகர்பாபு, ரங்கநாதன், பகுதி செயலாளர்கள் முரளிதரன், நாகராஜ், தேவ ஜவகர், மகேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் சென்றனர்.

பின்னர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:   ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் எப்படியிருக்கிறது? தேர்தல் சுதந்திரமாக நடைபெறும் என்று நினைக்கிறீர்களா?  கடந்த முறை  89 கோடி பணப்பட்டுவாடாவை கண்டுபிடித்தவுடன் தேர்தலை நிறுத்தினார்கள். உரிய நடவடிக்கையை எடுத்திருந்தால் இந்த தேர்தல் நியாமாக நடைபெறும் என்ற நம்பிக்கையோடு இருக்கலாம். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, யார் மீதும் எப்.ஐ.ஆர் போடப்படவில்லை. இந்த நிலையில்தான், இடைத்தேர்தலுக்கு மீண்டும் இடைத்தேர்தல் வந்திருக்கிறது. இந்த இடைத்தேர்தலையாவது முறையாக நடத்திட வேண்டும் எனபதனால் தான் தேர்தல் ஆணையம் தேர்தலை முறையாக நடத்துவோம் என்று அறிவிப்புகளை வெளியிட்டிருக்கி றார்கள். தேர்தலை முறையாக நடத்தினால் நிச்சயமாக, உறுதியாக திமுக மிகப்பெரிய வெற்றியை பெறும்.
ஆனால், ரிட்டர்னிங் ஆபிசர் நடிகர் விஷால் விவகாரத்தில் நடந்துக் கொண்டிருப்பதை பார்க்கும் போது, டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையம் இதுகுறித்து விசாரித்து, என்ன நடந்திருக்கிறது என்பதை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுத்தால்தான் இந்த தேர்தல் முறையாக நடைபெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கும் ஏற்படும், மக்களுக்கும் ஏற்படும்.

தேர்தலை நிறுத்துவதற்கான சதி நடப்பதாக உங்களுடைய கூட்டணிக் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியிருக்கிறாரே?  இருக்கலாம். ஏற்கனவே திமுக வெற்றி பெற போகிறது என்பதனால்தான்  89 கோடி விவகாரத்தை அடிப்படையாக வைத்து தேர்தலை நிறுத்தினார்கள். இப்போதும் அதுபோல செய்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனென்றால், திமுக மிகப்பெரிய வெற்றியை பெறக் கூடிய நிலை இன்று உருவாகியிருக்கிறது.  ஆளுநர் தொடர்ந்து ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அமைச்சர்கள் தேர்தல் பணியில் பிசியாக இருக்கிறார்கள். இதனை எப்படி பார்க்கிறீர்கள்?
 ஏற்கனவே கோவை, திருப்பூர் போன்ற மாவட்டங்களுக்கு ஒரு முதல்வரைப் போல அமைச்சர்களை போல பெரிய சுற்றுப்பயணத்தை நடத்தி, ஆய்வுப் பணிகளை நடத்தியிருக் கிறார். இப்போது திருநெல்வேலியில் ஆய்வு நடத்தியிருக்கிறார். கன்னியாகுமரிக்கும் செல்ல இருப்பதாக செய்திகள் வந்துக் கொண்டிருக்கிறது.

ஆளுநரை பொறுத்தவரையில், அரசியல் சட்ட விதிகளின்படி பார்த்தால் ஆய்வு நடத்துவ தற்கோ அல்லது மாவட்டவாரியாக சென்று மக்கள் பணிகளை கவனிப்பதற்கோ அதிகார மும் உரிமையும் இல்லை. இந்த பணிகளில் ஈடுபடும் ஆளுநரை நான் கேட்டுக்கொள்ள விரும்புவது, மெஜாரிட்டி இல்லாத இந்த குதிரை பேர அதிமுக ஆட்சி உடனடியாக பெரும்பான்மையை நிரூபிக்ககூடிய வகையில் சட்டமன்றத் தைக் கூட்டி, அந்த பணியை நிறைவேற்றுவார் என்றால், எல்லோரும் ஆளுநரை பாராட்டக் காத்திருக்கிறோம். கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்னும் 2000 மீனவர்களை காணவில்லை என்று மக்கள் கூறிவருகின்றனரே. மீன்வளத்துறை அமைச்சர் ஒரு கணக்கு சொல்கிறார், தலைமைச் செயலாளர் ஒரு கணக்கு சொல்கிறார், துணை முதல்வர் ஒரு கணக்கு சொல் கிறார்.  முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரு கணக்கு சொல்கிறார், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு கணக்கு சொல்கிறார். இப்படிதான் குழப்பிக் கொண்டிருக்கிறார்களே தவிர, முறையான கணக்கு எடுக்க அவர்களால் முடியவில்லை. ஏன், முடியவில்லை என்பது எனக்கு தெரியவில்லை. இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-10-2018

  24-10-18 இன்றைய சிறப்பு படங்கள்

 • FoamFightScotland

  முதலாம் ஆண்டு மாணவர்களை வித்தியாசமான முறையில் வரவேற்ற ஸ்காட்லாந்து பல்கலைக்கழம்: புகைப்படங்கள்

 • SALTMarchRashtrapti

  ராஷ்டிரபதி பவன் அருங்காட்சியகத்தில் புதிதாக வைக்கப்பட்டுள்ள காந்தியடிகளின் உருவ சிலைகள்: மாணவர்கள் கண்டுகளிப்பு

 • NagoroJapanVillage

  ஜப்பானில் உள்ள தீவில் வெறிச்சோடிய கிராமத்தை பொம்மைகளால் உயிரூட்டிய பெண்: குவியும் சுற்றுலா பயணிகள்

 • FallFoilageWorld

  உலகின் பல்வேறு நாடுகளில் எடுக்கப்பட்ட இலையுதிர் காலத்தின் அழகிய புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்