SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ராயப்பேட்டையில் டிரான்ஸ்பார்மர் சரிசெய்யும்போது மின்சாரம் தாக்கியதில் ஊழியர் படுகாயம்

2017-11-15@ 11:51:57

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் டிரான்ஸ்பார்மர் (மின்மாற்றி) சரிசெய்யும்போது மின்சாரம் தாக்கியதில் ஊழியர் ஒருவர் படுகாயமடைந்தார். ராயப்பேட்டை உட்லண்ட்ஸ் திரையரங்கு அருகே உள்ள டிரான்ஸ்பார்மரில் பழுது ஏற்பட்டதை அடுத்து, அங்கு வந்த மின்வாரிய ஊழியர்கள் ஹுசைன்(54) மற்றும் 3 பேர், வீடுகளுக்கு மின்சாரம் கொண்டுசெல்லும் டிரான்ஸ்பார்மரை அணைத்து மேலே ஏறி, பழுதுநீக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, மின்மாற்றிக்கு மின்சாரம் வரும் கம்பியில் ஹுசைனின் கைப்பட்டு, மின்சாரம் தாக்கியதில் அவர் காயமடைந்தார்.

இதையடுத்து, மற்ற ஊழியர்கள் அவசர அவசரமாக கீழே இறங்கிய நிலையில், மின்சாரம் தாக்கி இடது கையும், இடதுகாலும் செயல்படாததால், ஹுசைன் கீழே இறங்க முடியாமல் தவித்தார். இதையடுத்து, சக ஊழியர்கள் அளித்த தகவலின்பேரின் சம்பவ இடத்திற்கு வந்த திருவல்லிக்கேணி தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் இணைந்து, ஹுசைனை பத்திரமாக மீட்டனர். அவர் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். உட்லண்ட்ஸ் திரையரங்கு எதிரே உள்ள மின்மாற்றிக்கு அண்ணாசாலையில் உள்ள பெரிய மின்மாற்றியில் இருந்துதான் மின்சாரம் வருவதாகவும், அதை அணைக்காமல், இங்கு பணியில் ஈடுபட்டதே விபத்துக்கு காரணம் என்றும் அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-02-2018

    18-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • policecampchennai

    சென்னையில் காவலர் குறைதீர்ப்பு முகாம்: காவல்துறை தலைவர் டி.கே.ராஜேந்திரன் பங்கேற்பு

  • 2018Underwaterphotos

    2018ம் ஆண்டின் நீருக்கடியில் எடுத்த சிறந்த புகைப்படங்களுக்கான விருதுகளை பெற்ற படங்களின் தொகுப்பு..

  • modi_iran_president

    டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் - பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர் சந்திப்பு

  • mexico_earhquake

    மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 7.2 அலகுகளாக பதிவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்