SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எரிசக்தி சேமிப்பு குறித்த மாநில அளவிலான ஓவியப்போட்டி : இந்தியில் எழுதிய சான்றிதழை வழங்கிய அமைச்சர்

2017-11-15@ 10:11:17

சென்னை: மாநில அளவிலான ஓவியப் போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு இந்தியில் எழுதிய சான்றிதழை அமைச்சர் தங்கமணி வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எரிசக்தி சேமிப்பு குறித்து மாநில அரசுடன் இணைந்து மத்திய அரசு தமிழக அளவில் பள்ளி மாணவர்களுக்கான ஓவியப்போட்டி நடத்தியது. இப்போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் நடைபெற்ற விழாவில் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இந்தியில் எழுதப்பட்ட சான்றிதழ்களை தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி  மாணவர்களுக்கு வழங்கினார். இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மத்திய அரசு இந்தியை திணிப்பதாக எதிர்கட்சிகள் புகார் கூறிவரும் நிலையில், தமிழக அமைச்சரே இந்தியில் எழுதப்பட்ட சான்றிதழ்களை வழங்கியதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தமிழை இருட்டடிப்பு செய்யும் நடவடிக்கைக்கு தமிழக அமைச்சர்களே ஊதுகுழலாக இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-02-2018

    18-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • policecampchennai

    சென்னையில் காவலர் குறைதீர்ப்பு முகாம்: காவல்துறை தலைவர் டி.கே.ராஜேந்திரன் பங்கேற்பு

  • 2018Underwaterphotos

    2018ம் ஆண்டின் நீருக்கடியில் எடுத்த சிறந்த புகைப்படங்களுக்கான விருதுகளை பெற்ற படங்களின் தொகுப்பு..

  • modi_iran_president

    டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் - பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர் சந்திப்பு

  • mexico_earhquake

    மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 7.2 அலகுகளாக பதிவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்