கோவை அருகே வனப்பகுதியில் காலில் காயத்துடன் சுற்றிய யானை இறந்தது

2017-11-15@ 02:17:39

பெ.நா.பாளையம் : கோவை பெரியநாயக்கன்பாளையம் வனப்பகுதியை ஒட்டி உள்ள மலை கிராமங்களில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை ஒன்று இடது முன் காலில் பெரிய வீக்கத்துடன் சுற்றித்திரிந்தது. இந்த யானைக்கு நேற்று முன்தினம் சிகிச்சை அளிக்க கால்நடை மருத்துவர்கள் 2 முறை மயக்க ஊசி செலுத்தினர். புதர்களுக்கு அருகில் அரை மயக்கத்தில் நடந்து சென்ற யானை நடக்க முடியாமல் நின்றது. கால்நடை மருத்துவர்கள் வலி நிவாரணம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளை ஊசி மூலம் செலுத்தினர்.
முன்னங்காலில் இருந்த கட்டியை கிழித்து அறுவை சிகிச்சை செய்தனர். பின்னர் காயத்திற்கு உரிய மருந்துகளை வைத்தனர். சுமார் 2 மணி நேரம் போராடி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் யானை வனத்துக்குள் சென்றது. இந்நிலையில் நேற்று அதிகாலை வேட்டை தடுப்பு காவலர்கள் யானையை கண்காணிக்க வனப்பகுதிக்குள் சென்றபோது, அதே இடத்தில் யானை இறந்து கிடந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர் மனோகரன் ஆகியோர் யானையின் உடலை பரிசோதனை செய்தனர். பின்னர் யானையின் உடலை அதே இடத்தில் புதைத்தனர்.
மேலும் செய்திகள்
கடல்சீற்றத்தால், தென் தமிழக கடலோர மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் : வானிலை மையம்
காவிரி தண்ணீருக்கு ஏங்கும் பொதுமக்கள் : குடங்களுடன் அலையும் நிலை
குடிநீர் தட்டுப்பாட்டை போக்க சொந்த கிராமத்தில் ரூ.8.50 லட்சத்தில் குளங்களை தூர்வாரிய பட்டதாரி பெண்
கொடைக்கானல் அருகே நூற்றுக்கணக்கில் அனுமதியின்றி கட்டப்படும் புதிய கட்டிடங்கள்
செங்கோட்டை அருகே தோட்டத்தில் புகுந்து யானைகள் அட்டகாசம் : மா, பலா, வாழைகள் நாசம்
பலத்த காற்றுடன் பெய்த மழைக்கு மரங்கள் விழுந்து மின்சாரம் துண்டிப்பு : கிராம மக்கள் விடிய விடிய தவிப்பு
32 ஆண்டுகளுக்கு முன் பேரழிவை உண்டாக்கிய செர்னோபில் அணுமின் நிலையத்தின் தற்போதயை நிலை: புகைப்படங்கள் வெளியீடு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சந்திப்பு: புகைப்படங்கள்
மாற்றுத்திறனாளிகள் மட்டுமே வாழும் அதிசய கிராமம்: சேவை நோக்கத்துடன் உடனிருக்கும் தன்னார்வ தொண்டர்கள்!
காரணீஸ்வரர் திருக்கோயில் சித்திரை திருவிழா : சவுடல் விமானத்தில் காரணீஸ்வரர்
கனடாவில் பாதசாரிகள் மீது வேன் ஏற்றி தாக்குதல்: 10 பேர் பரிதாபமாக உயிரிழப்பு
LatestNews
மகாராஷ்டிராவில் பாதுகாப்பு படையினரின் தாக்குதலில் உயிரிழந்த மாவோயிஸ்ட்களின் எண்ணிக்கை 33ஆக உயர்வு
13:57
வங்கி மோசடி வழக்கு : டைமண்ட் பவர் நிறுவனத்தின் சொத்துக்கள் முடக்கம்
13:05
ஓமலூர் அருகே பெரியார் பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
12:56
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நிர்மலாவுடன் தங்கிய பேராசிரியைக்கு சம்மன்
12:47
வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் தகவல்
12:38
மரணதண்டனையை நிறைவேற்ற தூக்கிலிடுவதே பொருத்தமானது: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
12:37