உடுமலை சங்கர் கொலை வழக்கு : டிசம்பர் 12ம் தேதி தீர்ப்பு

2017-11-15@ 02:03:47

திருப்பூர்: காதல் கலப்பு திருமணம் செய்த உடுமலை சங்கர் படுகொலை வழக்கில் அடுத்த மாதம் டிசம்பர் 12ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுமென வன்கொடுமை தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி அறிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம், உடுமலை தாலுகா குமரலிங்கத்தை சேர்ந்தவர் சங்கர் (22). பொறியியல் பட்டதாரி. இவர், பழனியை சேர்ந்த கவுசல்யா என்ற பெண்ணை காதலித்து கலப்பு திருமணம் செய்தார். இதனால், கடந்த 13.3.2016ம் தேதி, உடுமலை பஸ் ஸ்டாண்ட் அருகில் பட்டப்பகலில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். சங்கரின் மனைவி கவுசல்யா படுகாயத்துடன் உயிர் தப்பினார்.
இந்த சம்பவம் தொடர்பாக கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, தாய் அன்னலட்சுமி, மாமா பாண்டித்துரை, மணிகண்டன், செல்வகுமார், ஜெகதீசன், கலைதமிழ்வாணன், மணிகண்டன், தன்ராஜ், பிரசன்னகுமார் உள்பட 11 பேரை உடுமலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பொதுமக்களையும், சமுதாயத்தையும் அச்சுறுத்தும் செயலில் ஈடுபட்டதற்காக 9 பேர் மீது குண்டாஸ் போடப்பட்டது. இவ்வழக்கு திருப்பூர் வன்கொடுமை தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. வழக்கில் இறுதிகட்ட விசாரணைக்காக குற்றம் சாட்டப்பட்ட 11 பேரும் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, நீதிபதி அலமேலு நடராஜன் அடுத்த மாதம் (டிசம்பர்) 12ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்தார். இதன்பின் 11 பேரும் கோவை சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
* கல்லூரி செல்லும்போது உடுமலை சங்கர், பழனி கவுசல்யா இடையே பஸ்சில் மலர்ந்த காதல் திருமணத்தில் முடிந்தது.
* உடுமலை பஸ் ஸ்டாண்ட் அருகில் 13.3.2016ம் தேதி, பட்டப்பகலில் சங்கர் வெட்டிக் கொல்லப்பட்டார்.
* சிசிடிவியில் பதிவான கொலை வீடியோ வைரலாக பரவியது.
* கவுசல்யாவின் பெற்றோர் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகள்
கடல்சீற்றத்தால், தென் தமிழக கடலோர மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் : வானிலை மையம்
காவிரி தண்ணீருக்கு ஏங்கும் பொதுமக்கள் : குடங்களுடன் அலையும் நிலை
குடிநீர் தட்டுப்பாட்டை போக்க சொந்த கிராமத்தில் ரூ.8.50 லட்சத்தில் குளங்களை தூர்வாரிய பட்டதாரி பெண்
கொடைக்கானல் அருகே நூற்றுக்கணக்கில் அனுமதியின்றி கட்டப்படும் புதிய கட்டிடங்கள்
செங்கோட்டை அருகே தோட்டத்தில் புகுந்து யானைகள் அட்டகாசம் : மா, பலா, வாழைகள் நாசம்
பலத்த காற்றுடன் பெய்த மழைக்கு மரங்கள் விழுந்து மின்சாரம் துண்டிப்பு : கிராம மக்கள் விடிய விடிய தவிப்பு
32 ஆண்டுகளுக்கு முன் பேரழிவை உண்டாக்கிய செர்னோபில் அணுமின் நிலையத்தின் தற்போதயை நிலை: புகைப்படங்கள் வெளியீடு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சந்திப்பு: புகைப்படங்கள்
மாற்றுத்திறனாளிகள் மட்டுமே வாழும் அதிசய கிராமம்: சேவை நோக்கத்துடன் உடனிருக்கும் தன்னார்வ தொண்டர்கள்!
காரணீஸ்வரர் திருக்கோயில் சித்திரை திருவிழா : சவுடல் விமானத்தில் காரணீஸ்வரர்
கனடாவில் பாதசாரிகள் மீது வேன் ஏற்றி தாக்குதல்: 10 பேர் பரிதாபமாக உயிரிழப்பு
LatestNews
வங்கி மோசடி வழக்கு : டைமண்ட் பவர் நிறுவனத்தின் சொத்துக்கள் முடக்கம்
13:05
ஓமலூர் அருகே பெரியார் பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
12:56
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நிர்மலாவுடன் தங்கிய பேராசிரியைக்கு சம்மன்
12:47
வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் தகவல்
12:38
மரணதண்டனையை நிறைவேற்ற தூக்கிலிடுவதே பொருத்தமானது: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
12:37
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நாகை மாவட்டத்தில் மறியல்
12:28