SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

60 ஏக்கர் எஸ்டேட் வாங்கிய விவகாரம் : கோடநாடு எஸ்டேட் மேலாளரிடம் கோவையில் விசாரணை நீடிப்பு

2017-11-15@ 02:00:16

குன்னூர்: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாட்டு எஸ்டேட் உள்ளது. இதன் அருகிலேயே கிரீன் டீ எஸ்டேட் உள்ளது. கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனை கிரீன் டீ எஸ்டேட்டில் வைத்து தொடர்ந்து வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரித்தனர். இந்த விசாரணை நேற்று 6வது நாளாக நீடித்தது. இதேபோல் கிரீன் டீ எஸ்டேட் மேலாளர் பழனிகுமாரை நேற்று முன்தினம் முதல் விசாரணை வளையத்துக்கு கொண்டு வந்து, விசாரணை மேற்கொண்டனர். நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் கிரீன் டீ எஸ்டேட் சென்ற அதிகாரிகள் ஒரு சூட்கேஸ் மற்றும் 4 பைகளில் ஆவணங்களை கொண்டு சென்றனர். இந்தசோதனையில் சென்னை, மன்னார்குடி மற்றும் ஐதராபாத்தில் உள்ள திராட்சை தோட்டம் குறித்த ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.

நேற்று காலை முதல் கோடநாடு மற்றும் கிரீன் டீ எஸ்டேட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து 2 மேலாளரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இவர்களில் கிரீன் டீ எஸ்டேட் மேலாளர் பழனிகுமார் உள்ளிட்ட 20 பேர் சென்னையில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளனர். ஆனால், கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்துவதற்காக நேற்று இரவு 8.43 மணிக்கு கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். அங்குள்ள ஒரு அறையில் வைத்து நடராஜனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடராஜன் பெயரில் 60 ஏக்கர் பரப்பளவு கொண்ட எஸ்டேட் வாங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சோதனையின்போது கிடைத்த ஆவணங்களை வைத்து, விசாரிக்கப்படுகிறது என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-10-2018

    21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • dussehraa_11

    நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்