SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கலெக்டர், எஸ்.பி ஆபீசில் தற்கொலை முயற்சிகளை தடுக்க காவல் துறையில் புதிதாக சிவிலியன் படை துவக்கம்

2017-11-15@ 01:56:18

நெல்லை: நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் காசிதர்மத்தை சேர்ந்த இசக்கிமுத்து, மனைவி மற்றும் குழந்தைகளுடன் கந்துவட்டி கொடுமையால் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.  இந்நிலையில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒருவர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சித்தார். பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி காப்பாற்றினர். கலெக்டர், எஸ்பி அலுவலகங்களில் புகார் மனு அளிக்க வரும் பொதுமக்களை சோதனைக்கு பிறகு போலீசார் அனுமதித்தாலும், மன உளைச்சலுக்கு ஆளானவர்கள் தீக்குளிப்பு உள்ளிட்ட தற்கொலை முயற்சிகளில் ஈடுபடும் நிலைதான் உள்ளது.

இதனை தடுப்பதற்காக தமிழக காவல் துறையில் சிவிலியன் படை என்ற புதிய பிரிவு தொடங்கப்படுகிறது. இதில் பணியாற்றும் காவலர்கள் சாதாரண உடையில் பொதுமக்களோடு மக்களாக இருப்பர். இவர்கள், அலுவலக வளாகத்தில் முழு கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர். கலெக்டர், எஸ்பி அலுவலகங்களில் குறைகளை கூற வருபவர்களிடம் சக மக்களாக பேச்சுக் கொடுத்து அவர்களின் செயல்பாடுகளை கண்காணித்து உயரதிகாரிகள் மற்றும் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் போலீசாருக்கு தகவல் தெரிவிப்பார்கள்.

இதுகுறித்து போலீஸ்  உயரதிகாரி ஒருவர் கூறுகையில்,  சிவிலியன் காவல்படையில் இருக்கும் மப்டி போலீசார், மனு அளிக்க வருபவர்களை கண்டறிந்து அவர்களின் நடவடிக்கை, எத்தனை முறை வந்துள்ளார். மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளாரா? என்பதை தெரிந்து கொண்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில் பணியில் உள்ள போலீசாரிடம் தெரிவிப்பர்” என்றார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • CherobylNuclearPowerplant

    32 ஆண்டுகளுக்கு முன் பேரழிவை உண்டாக்கிய செர்னோபில் அணுமின் நிலையத்தின் தற்போதயை நிலை: புகைப்படங்கள் வெளியீடு

  • ImmanueltrumpMeet

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சந்திப்பு: புகைப்படங்கள்

  • SvetlanaVillageRussia

    மாற்றுத்திறனாளிகள் மட்டுமே வாழும் அதிசய கிராமம்: சேவை நோக்கத்துடன் உடனிருக்கும் தன்னார்வ தொண்டர்கள்!

  • karaneeswarargod

    காரணீஸ்வரர் திருக்கோயில் சித்திரை திருவிழா : சவுடல் விமானத்தில் காரணீஸ்வரர்

  • TorontoPedestriansAttack

    கனடாவில் பாதசாரிகள் மீது வேன் ஏற்றி தாக்குதல்: 10 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்