SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருப்பத்தூர் அருகே பள்ளிக்கு சென்ற மாணவனை கடத்தி பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்ல முயற்சி

2017-11-15@ 01:53:18

திருப்பத்தூர்: வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த ஜோன்றம்பள்ளி ஏரிக்கோடியைச் சேர்ந்தவர் முருகன்(48), கூலித்தொழிலாளி. இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு கோவிந்தன்(14) என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர். முருகன், செல்வி இருவரும் 10 ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப தகராறு காரணமாக பிரிந்து தனித்தனியாக வசிக்கின்றனர். தற்போது முருகன் திருப்பூரிலும், செல்வி பெங்களூருவிலும் கூலி வேலை செய்து வருகின்றனர். இதனால் கோவிந்தன், அவரது தங்கை இருவரும் தங்களது தாத்தா தொடத்தாமன் வீட்டில் தங்கி படித்து வருகின்றனர். கோவிந்தன் வெங்களாபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று காலை கோவிந்தன் வழக்கம்போல் சைக்கிளில் பள்ளிக்கு சென்றார். ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் பைக்கில் வந்த 2 மர்ம ஆசாமிகள், மாணவனை திடீரென வழிமறித்து, முகத்தில் துணியால் மூடி வலுக்கட்டாயமாக அருகே உள்ள ஒரு மாந்தோப்புக்கு கடத்திச்சென்றனர். பின்னர், மாணவன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளனர். தீ உடல் முழுவதும் பரவியதால் கோவிந்தன் அலறித்துடித்தார். அப்பகுதியில் ஆட்கள் யாரும் இல்லாத நிலையில் அருகே உள்ள நேதாஜி நகர் வரை சுமார் 100 மீட்டர் தூரம் அலறியபடியே ஓடினார்.  இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் மாணவன் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

பின்னர், பலத்த தீக்காயமடைந்த கோவிந்தனை திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.  தகவலறிந்து திருப்பத்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், டிஎஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையில் 2 இன்ஸ்பெக்டர்கள் கொண்ட தனிப்படை போலீசார் மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.  மாணவன் கோவிந்தன் நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து சகமாணவனின் பர்சை எடுத்ததாகவும், அதை கண்டுபிடித்த வகுப்பு ஆசிரியர் கோவிந்தனை கண்டித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் கோவிந்தன் தனக்கு தானே பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றாரா? அல்லது சொத்து பிரச்னைக்காக மாணவனை கடத்தி கொலை செய்ய முயன்றார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • SwanCountingEngland

  இங்கிலாந்தில் மகாராணி எலிஸபெத்திற்கு சொந்தமான அன்னப்பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்!

 • MilkProtestMaharashtra

  மகாராஷ்டிரத்தில் பால் உற்பத்தியாளர்கள் பாலை தரையில் ஊற்றி போராட்டம்: பால் விலையை ஏற்றக் கோரிக்கை

 • CrocodilesIndonesia

  300 முதலைகளை ஒரே நேரத்தில் கொன்று குவித்த கிராம மக்கள்: இந்தோனேஷியாவில் பயங்கரம்

 • trumpputinmeet

  பின்லாந்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் - ரஷ்ய அதிபர் புதின் இடையே முக்கிய பேச்சுவார்த்தை

 • obamakenya

  கென்யா சென்ற முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவிற்கு மக்கள் உற்சாக வரவேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்