SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை அழைத்து வந்து தனியாக வைத்து ஐடி அதிகாரிகள் விசாரித்தால் உண்மை வெளிவரும் : இளங்கோவன் பரபரப்பு பேட்டி

2017-11-15@ 01:29:09

சென்னை: முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவின் 128வது பிறந்த தினத்தை முன்னிட்டு, கிண்டி கத்திப்பாராவில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் கவர்னர் பன்வாரிலால் புரோகித், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின், கடம்பூர் ராஜு, மாபா.பாண்டியராஜன், வாரிய தலைவர் வளர்மதி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.  அதை தொடர்ந்து, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் தலைவர்கள் தங்கபாலு, ஈவிகேஎஸ்.இளங்கோவன், வசந்தகுமார் எம்எல்ஏ, மாவட்ட தலைவர்கள் கராத்தே தியாகராஜன், சிவ.ராஜசேகரன், வீரபாண்டியன், ரூபி மனோகரன், முன்னாள் மாவட்ட தலைவர் ரங்கபாஷ்யம் உட்பட பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். அப்போது ஈவிகேஎஸ்.இளங்கோவன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தை கொள்ளை அடித்து சென்றவர்கள்தான் இன்று சிறைக்கு சென்று கொண்டிருக்கின்றனர். இன்றைக்கு சசிகலா வகையறாக்களுக்கு சொந்தமான 215 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டுள்ளது. ரூ.5000 கோடிக்கும் அதிகமான சொத்துகளுக்கான ஆவணங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன.

இந்நிலையில், சசிகலாவையும் பெங்களூர் சிறையில் இருந்து சென்னை அழைத்து வந்து அதிகாரிகள் விசாரிக்க வேண்டும். ஏனென்றால் இத்தனை ஆயிரக்கணக்கான, கோடிக்கணக்கான ரூபாயை கொள்ளையடித்ததில் முதல் குற்றவாளி சசிகலாதான். இந்த ஒட்டு மொத்த சோதனைக்கு முதல் குற்றவாளி சசிகலாதான். இந்த வருமான வரி சோதனையில் அரசியல் இருப்பதாக நினைக்கவில்லை. சசிகலாவை பெங்களூரு சிறையில் இருந்து அழைத்து வந்து தனிமைப்படுத்தி அவரிடம் விசாரித்தால்தான் உண்மை வெளிவரும்.

தினகரனை வெளியில் விட்டு வைக்கவே கூடாது. அவர் என்ன சொல்கிறார். என்னை  அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறையில் அடைத்தாலும் கூட, எனக்கு இப்போது 50 வயது தான் ஆகிறது. 70 வயதில் வெளியில் வந்தாவது பழிவாங்குவேன் என்று செல்கிறார். இப்படி ஒரு குற்றவாளி அப்பட்டமாக பேசுவதை மத்திய, மாநில அரசுகள் எப்படி பொறுத்து கொண்டிருக்கிறது என்பது எனக்கு தெரியவில்லை. முதலில் அவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-10-2018

    21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • dussehraa_11

    நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்