SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிளஸ்2 மாணவர்களுக்கு வரைவு பாடத்திட்டம் 20ம் தேதி வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது : அமைச்சர் தகவல்

2017-11-15@ 01:25:49

சென்னை:தமிழக பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் நூலகத் தந்தை எஸ்.ஆர். அரங்கநாதன் விருது வழங்கும் விழா, குழந்தைகள் தின விழா சென்னை சாந்தோம், செயின்ட் பீட்ஸ் அரங்கத்தில் நேற்று நடந்தது. விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு விருதுகள் வழங்கி பேசியதாவது: மத்திய அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் தமிழகத்தில் பயிற்சி மையங்களை தொடங்கி  வைத்துள்ளோம். நூலக நிதி ரூ.5 கோடி வழங்கப்பட்டுள்ளது. சிறந்த நூல்களை வாங்கி  வைக்க ரூ.6 கோடி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாணவர்கள் பிளஸ் 2 வகுப்பு முடித்த பிறகு உயர் கல்வியில் என்ன படிக்கலாம், வேலை வாய்ப்புள்ள படிப்புகள் எவை என்பது குறித்து அறிந்து கொள்ள உதவி மையம்(Helpline) திட்டம் ஒன்று 24ம் தேதி தொடங்கப்பட உள்ளது. அதேபோல வரைவுப் பாடத்திட்டம் 20ம் தேதி வெளியிடப்படும். ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி விரைவில் தொடங்கப்படும். அதில் சிப் பொருத்துவது தொடர்பாக வழக்கு உள்ளதால் ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டம் தள்ளிப்போனது. டிசம்பர் இறுதியில் அதுவும் வழங்கப்படும். நூலகத் துறையை பொறுத்தவரையில் நூலகர் விருதுடன் ரூ.2000 வழங்கப்பட்டு வருகிறது.

அடுத்த ஆண்டு முதல் அது ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.  இன்னும் பல திட்டங்களை இந்த அரசு கொண்டு வர உள்ளது. இவற்றை பயன்படுத்தி மாணவர்கள் வெற்றி பெற வேண்டும் என்றார்.  இதையடுத்து, சிறப்பாக சேவை செய்த 32 நூலகர்களுக்கு எஸ்.ஆர். அரங்கநாதன் விருதுகள் ரொக்கம் ரூ.2000 வழங்கப்பட்டது. மேலும் மாநில அளவில் அதிக உறுப்பினர்கள், புரவலர்கள் சேர்த்தல், அதிக நன்கொடைகள் பெற்றது என்ற வகையில் ஊர்ப்புற நூலகங்களுக்கு தலா 4 கேடயங்கள் வீதம் 12 கேடயங்கள் வழங்கப்பட்டது. பொதுமக்களிடம் வாசிக்கும் பழக்கத்தை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்ட 3 வாசகர் வட்டத் தலைவர்கள் 3 பேருக்கு நூலக ஆர்வலர் விருது வழங்கப்பட்டது.

12 லட்சம் பேருக்கு தனி கவனம்

கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியரில் கற்றல் திறன் குறைபாடு உள்ளவர்கள் சுமார் 12 லட்சம் பேர் உள்ளனர். அவர்களுக்கு தனியாக பயிற்சி அளிக்கும் திட்டமும் தொடங்கப்பட உள்ளது. தமிழகத்தில் 32 மாவட்டங்களில் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு பயிற்சி அளிப்பதற்கான மையங்கள் டிசம்பர் இறுதியில் தொடங்கப்படும் என்றார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • Greecemilitarydictatorship

  கிரேக்க நாட்டை ஆளும் ராணுவ சர்வாதிகாரத்திற்கு எதிராக மாணவர்கள் போராட்டம்

 • 18-11-2017

  18-11-2017 இன்றைய சிறப்பு படங்கள்

 • afg_suicide_dead

  ஆப்கான் நாட்டில் அரசியல் கூட்டத்திற்கு அருகே நடந்த தற்கொலை படை தாக்குதலில் 9 பேர் பலி

 • GujaratAfricanSiddhi

  குஜராத்தில் ஆஃப்ரிக்க வம்சாவளியைச் சேர்ந்த சித்தி மக்கள்: பல நூற்றாண்டுகளாக இந்தியாவில் தஞ்சம்

 • Karthikayam

  இன்று கார்த்திகை மாத பிறப்பு : ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்