SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேர்தலில் கூட்டணி வைக்க அதிமுகவில் ஒரு அணியை பாஜ பலப்படுத்துகிறது : திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு

2017-11-15@ 01:21:52

சென்னை: தேர்தலில் கூட்டணி வைக்கவே அதிமுகவில் ஒரு அணியை பாஜ பலப்படுத்துகிறது என்று திருநாவுக்கரசர் கூறினார்.  மறைந்த பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்த நாளை முன்னிட்டு, சத்தியமூர்த்தி பவனில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவபடத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். முன்னதாக திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுகவில் ஒரு அணியை பலப்படுத்தவும், மற்றொரு அணியை பலவீனப்படுத்தும் வகையில் குறி வைத்து சோதனை நடத்துவதை கண்டிக்கிறோம்.

பலப்படுத்தும் அணிக்கு சின்னம் தந்து உள்ளாட்சி, நாடாளுமன்ற தேர்தல்களில் கூட்டணி வைக்கவுமே பாஜக மற்றொரு அணியை பலவீனப்படுத்துகின்றனர் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சேகர்ரெட்டி, அன்புநாதன், தலைமை செயலாளர் வீடுகளில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனை பற்றி எந்த தகவலும் இதுவரை தெரிவிக்கவில்லை. எம்ஜிஆர் மருத்துவமனையில் இருந்த போது, பிரதமராக இருந்த இந்திராகாந்தி தனி விமானம் ஏற்பாடு செய்து அவரை அமெரிக்காவில் சிகிச்சை பெறச் செய்தார்.  

இதனால் அவர் 3 ஆண்டுகள் கூடுதலாக வாழ்ந்தார். அதேபோன்று ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது அமெரிக்கா, சிங்கப்பூருக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றிருந்தால் பிழைத்திருக்க வாய்ப்புள்ளது. அதற்கான முயற்சியை  பிரதமர் அலுவலகமும், இங்குள்ள அமைச்சரவையும் ஏன் எடுக்கவில்லை. இதை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். அப்போது, மத்திய அரசு, மத்திய சுகாதாரத்துறை, இங்குள்ள முதல்வர் அலுவலகம் ஆகியவற்றில் விசாரணை நடத்தவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • CherobylNuclearPowerplant

  32 ஆண்டுகளுக்கு முன் பேரழிவை உண்டாக்கிய செர்னோபில் அணுமின் நிலையத்தின் தற்போதயை நிலை: புகைப்படங்கள் வெளியீடு

 • ImmanueltrumpMeet

  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சந்திப்பு: புகைப்படங்கள்

 • SvetlanaVillageRussia

  மாற்றுத்திறனாளிகள் மட்டுமே வாழும் அதிசய கிராமம்: சேவை நோக்கத்துடன் உடனிருக்கும் தன்னார்வ தொண்டர்கள்!

 • karaneeswarargod

  காரணீஸ்வரர் திருக்கோயில் சித்திரை திருவிழா : சவுடல் விமானத்தில் காரணீஸ்வரர்

 • TorontoPedestriansAttack

  கனடாவில் பாதசாரிகள் மீது வேன் ஏற்றி தாக்குதல்: 10 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்