SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆசியான் மாநாட்டில் பேச்சு ; தீவிரவாதத்தை குறைக்க ஒன்றிணைய வேண்டும் : பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்

2017-11-15@ 01:19:12

புதுடெல்லி: தீவிரவாத்தை குறைக்க அனைத்து நாடுகளும் ஒன்றிணைய வேண்டும் என்று ஆசியான் மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார்.  தெற்காசிய நாடுகளின்(ஆசியான்) 31வது மாநாடு, பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் பிரதமர் மோடி,  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியூடர்டே, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உள்ளிட்ட தலைவர்கள்  பங்கேற்றனர். மாநாட்டின் இடையே, பிரதமர் மோடி-அதிபர் டிரம்ப் ஆகியோர் சந்தித்து இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து சுமார் 45  நிமிடங்கள் பேசினர்.

இந்த சந்திப்பு குறித்து அமெரிக்காவின் வெள்ளை மாளிகை நேற்று விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியா-பசிபிக் பகுதியில் இரு  நாடுகளும் இணைந்து செயல்படுவது பற்றி இரு தலைவர்களும் பேசினார். ராணுவத் துறையில் இரு நாடுகளும் ஒத்துழைப்புடன் செயல்பட அவர்கள்  உறுதியளித்தனர். உலகின் மிகச் சிறந்த ஜனநாயக நாடுகளாக இருக்கும் இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும், உலகின் மிகச் சிறந்த ராணுவ பலம்  தேவை என அவர்கள் விரும்புகின்றனர்.

அமெரிக்காவிடம் இருந்து இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய் அளவு 10 மில்லியன் பேரல்களை தாண்டியுள்ளதற்கு அதிபர் டிரம்ப் பாராட்டு  தெரிவித்தார். எரிசக்தி துறையில் இரு நாடுகள் இடையேயான ஒத்துழைப்பு பொருளாதாரத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என டிரம்ப் கூறினார். இந்தியாவில் நடைபெறவுள்ள உலக தொழிலதிபர்கள் மாநாட்டில், அதிபர் டிரம்பின் மகள் இவாங்கா தலைமையிலான அமெரிக்க குழுவை வரவேற்பதில்  ஆர்வமாக உள்ளதாக மோடி தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிலாவில் நேற்று ஜப்பான் அதிபர் ஷின்சோ அபே, ஆஸ்திரேலிய அதிபர் மால்கம் டர்ன்புல், வியட்நாம்  பிரதமர் குயென் ஜான் புக், புரூனே சுல்தான் ஹசன்லால் போல்கியா, நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டர்ன் ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்து இரு  தரப்பு வர்த்தக உறவுகள் குறித்தும், கடல்சார் பாதுகாப்பை மேப்படுத்துவதும் குறித்து பேசினார். சீன பிரதமர் லீ கெகியாங்குடன் சில நிமிடங்கள்  பிரதமர் பேசினார்.

இரண்டாவதுநாள் ஆசிய மாநாட்டில், தென் சீன கடல் பகுதியில் உள்ள ஹைட்ரோ கார்பன் வளங்கள் தங்களுக்கு மட்டுமே சொந்தம் என சீனா  கூறியது. ஆனால் வியட்நாம், பிலிப்பைன்ஸ் மற்றும் புரூனே போன்ற ஆசிய நாடுகள் தங்களுக்கு உரிமை உள்ளதாக கூறின. தென் சீன கடல்  பகுதியில் தடையற்ற கப்பல் போக்குவரத்துக்கும், இயற்கை வளங்களை சர்வதேச விதிமுறைகள் படியும், ஐ.நா கடல் சட்டத்தின்படி அனைவரும்  பயன்படுத்தி கொள்ள இந்தியா ஆதரவு தெரிவித்தது.

இதற்கிைடயே 2வது நாள் மாநாட்டில் தெற்காசிய நாடுகளின் தலைவர்கள் இடையே பிரதமர் மோடி நேற்று பேசியதாவது: தீவிரவாத அச்சுறுத்தலால்  நாம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். தீவிரவாதத்தை குறைக்க நாம் ஒன்றிணைந்து யோசிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. ஆசியான் அமைப்பு  உருவாகி 50 ஆண்டுகள் ஆகியுள்ளது பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. பல விஷயங்களில் சாதிப்பது பற்றி நாம் சிந்திக்க வேண்டிய நேரம்  வந்துவிட்டது. நமது உறவுகள் மிகப் பழமையானது. அந்த ஒத்துழைப்பை நாம் மேலும் வலுப்படுத்த விரும்புகிறோம். தெற்காசிய பகுதியில்  விதிமுறைகள் அடிப்படையிலான பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்க நாம் தொடர்ந்து ஆதரவு அளிப்போம். இவ்வாறு மோடி பேசினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Greecemilitarydictatorship

    கிரேக்க நாட்டை ஆளும் ராணுவ சர்வாதிகாரத்திற்கு எதிராக மாணவர்கள் போராட்டம்

  • 18-11-2017

    18-11-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • afg_suicide_dead

    ஆப்கான் நாட்டில் அரசியல் கூட்டத்திற்கு அருகே நடந்த தற்கொலை படை தாக்குதலில் 9 பேர் பலி

  • GujaratAfricanSiddhi

    குஜராத்தில் ஆஃப்ரிக்க வம்சாவளியைச் சேர்ந்த சித்தி மக்கள்: பல நூற்றாண்டுகளாக இந்தியாவில் தஞ்சம்

  • Karthikayam

    இன்று கார்த்திகை மாத பிறப்பு : ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்