SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெண்ணை திருமணம் செய்வதாக மோசடி பாகுபலி திரைப்பட நடிகர் கைது : திரையுலகினர் அதிர்ச்சி

2017-11-15@ 01:16:49

திருமலை: பெண்ணை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய வழக்கில் பாகுபலி திரைப்பட நடிகரை போலீசார் கைது செய்தனர். பிரபல தெலுங்கு  திரைப்பட நடிகர் பிரபாஸ், நடிகை அனுஷ்கா நடிப்பில் பிரபல இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படம் உலகம் முழுவதும்  ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் பிரபாசின் வளர்ப்பு தந்தையாக ஐதராபாத்தைச் சேர்ந்த வெங்கடபிரசாத் நடித்தார்.  இவர், பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார். வெங்கடபிரசாத், ஐதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியைச் ேசர்ந்த பெண்ணுடன்  கடந்த 7 ஆண்டுகளாக திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்தார். 2 முறை அப்பெண் கர்ப்பமான நிலையில் திருமணத்துக்கு முன்பு குழந்தை வேண்டாம்  எனக்கூறி வெங்கடபிரசாத் கருக்கலைப்பு செய்ததாக கூறப்படுகிறது.

அதன்பிறகு சமீபகாலமாக வெங்கடபிரசாத் அந்த பெண்ணை விலகி சென்றாராம். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் பஞ்சாரா ஹில்ஸ் காவல்  நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் செய்தார். இதில், வெங்கடபிரசாத் தன்னை திருமணம் செய்வதாகக்கூறி ஏமாற்றியதாகவும், சினிமா  துறையினர் போதை மருந்து விவகாரத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், வெங்கடபிரசாத்துக்கும் அதில் தொடர்பிருப்பதாகவும்  தெரிவித்தார். அதன்பேரில், போலீசார் 420, 354, 506, 509 ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, வெங்கடபிரசாத்தை கைது செய்தனர்.  இச்சம்பவம் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • CherobylNuclearPowerplant

    32 ஆண்டுகளுக்கு முன் பேரழிவை உண்டாக்கிய செர்னோபில் அணுமின் நிலையத்தின் தற்போதயை நிலை: புகைப்படங்கள் வெளியீடு

  • ImmanueltrumpMeet

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சந்திப்பு: புகைப்படங்கள்

  • SvetlanaVillageRussia

    மாற்றுத்திறனாளிகள் மட்டுமே வாழும் அதிசய கிராமம்: சேவை நோக்கத்துடன் உடனிருக்கும் தன்னார்வ தொண்டர்கள்!

  • karaneeswarargod

    காரணீஸ்வரர் திருக்கோயில் சித்திரை திருவிழா : சவுடல் விமானத்தில் காரணீஸ்வரர்

  • TorontoPedestriansAttack

    கனடாவில் பாதசாரிகள் மீது வேன் ஏற்றி தாக்குதல்: 10 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்