சென்னையின் எப்சி சிறப்பாக விளையாடும்... : பயிற்சியாளர் கிரிகோரி நம்பிக்கை

2017-11-15@ 01:16:23

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டித் தொடரில் களமிறங்கும் சென்னையின் எப்சி அணியின் புதிய பயிற்சியாளர் ஜான் கிரிகோரி, 4வது சீசனில் எதிர்கொள்ள இருக்கும் சவால் குறித்து கூறியதாவது: கடந்த மூன்று சீசனிலும் மார்கோ மேட்டராஸியின் பயிற்சியின் கீழ் சென்னை அணி மிக சிறப்பாக விளையாடி ரசிகர்களைக் கவர்ந்தது. அவரது பங்களிப்பு மகத்தானது. அதை தொடர விரும்புகிறேன். தாய்லாந்தில் நடந்த மூன்று வார பயிற்சி முகாம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. தாய்லாந்து எப்சி அணியுடன் விளையாடிய போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் வென்ற்து, வீரர்களின் தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது. எதிர்வரும் சீசனில் சிறப்பாக விளையாடி வெற்றிகளைக் குவிக்க முடியும் என நம்புகிறோம்.
இந்த கிளப் நட்சத்திரங்களை உருவாக்கும் என்ற நற்பெயரைக் கொண்டுள்ளது. நான்காவது சீசன் முடிவில் சென்னையின் எப்சி சார்பில் சில நட்சத்திரங்கள் நிச்சயம் உருவாகுவார்கள்.
கேப்டன் ஹென்ரிக் சொரெனோ, ரபெல் ஆகஸ்டோ, இனிகோ கால்டரோன் போன்ற வெளிநாட்டு வீரர்களுடன், இந்திய நட்சத்திரங்களான ஜெஜே, கோல்கீப்பர் கரஞ்சித் சிங், ஜெர்ரி லால், அனிருத் தாபா, தோய் சிங், தனபால் கணேஷ் தனச்சாந்திரா சிங் ஆகியோர் நம்பிக்கையளிக்கின்றனர். ஒவ்வொரு பயிற்சியாளருக்கும் பிரத்யேகமான பாணி இருக்கும். எனது செயல்பாட்டை ஊடகங்களும் ரசிகர்களும் மதிப்பிடட்டும். மார்கோ அல்லது வேறு பயிற்சியாளர் போலவே, நானும் தோல்வியை வெறுப்பவன்,வெற்றியை விரும்புபவன். இவ்வாறு பயிற்சியாளர் கிரிகோரி கூறியுள்ளார்.
இங்கிலாந்தை சேர்ந்த கிரிகோரி இங்கிலீஸ் பிரீமியர் லீக்கில் விளையாடும் பிரபலமான ஆஸ்டன் வில்லா அணியோடு 4 ஆண்டுகள் இணைந்து பணியாற்றி உள்ளார். சென்னையின் எப்சி தனது முதல் லீக் ஆட்டத்தில் வரும் 19ம் தேதி கோவா எப்சி அணியை சந்திக்கிறது.
மேலும் செய்திகள்
‘உண்மையான உலக நாயகன்’
2021ல் சாம்பியன்ஸ் டிராபிக்கு பதிலாக உலக டி20
ஜூன் 16ல் இந்தியா-பாக். மோதல்
ஆசிய பேட்மின்டன் சாம்பியன்ஷிப் கால் இறுதியில் சாய்னா, சிந்து
கேல் ரத்னா, துரோணாச்சாரியா, தயான்சந்த் விருதுக்கு கோஹ்லி, டிராவிட், கவாஸ்கரை பரிந்துரை செய்தது பிசிசிஐ
2019ல் ஐபிஎல் இடமாற்றமா?
27-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்
சென்னையில் நடைபெற்ற இடைநிலை ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் வாபஸ்..!
இந்தோனேஷியாவில் எண்ணெய் கிணற்றில் தீ : 21 பேர் பரிதாப பலி
ஹவாய் தீவு அருகே உள்ள எரிமலையில் சீற்றம்...ஆறாக ஓடும் எரிமலைக் குழம்பு!
பெர்லிங்கில் சர்வதேச ஏரோஸ்பேஸ் கண்காட்சி : பல்வேறு நாடுகளின் புதுமையான கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன
LatestNews
அரசு மருத்துவமனை கண்ணாடி கதவு உடைந்தது
00:53
திருப்பதி அறங்காவலர் குழுவில் அனிதா நீக்கம்
00:15
தஞ்சையில் இன்று காவிரி போராட்டம் திரைப்பட இயக்குனர்கள் ஆதரவு
00:07
கூடலூர் அருகே யானை தாக்கி மூதாட்டி பலி
00:07
ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டி: பஞ்சாப் அணிக்கு 133 ரன்கள் வெற்றி இலக்கு
21:35
முருகன் நண்பர் தங்கப்பாண்டியிடம் 36 மணி நேரத்திற்கு விசாரணை நிறைவு
20:51