SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஏடிபி உலக டூர் பைனல்ஸ் தோல்வியுடன் விலகினார் நடால்

2017-11-15@ 01:16:22

லண்டன் : ஏடிபி உலக டூர் பைனல்ஸ் ரவுண்ட் ராபின் லீக் ஆட்டத்தில் டேவிட் காபினிடம் போராடி தோற்ற நம்பர் 1 வீரர் ரபேல் நடால், காயம் காரணமாக தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தார். சீசன் முடிவு தரவரிசை பட்டியலில் டாப் 8 இடங்களைப் பிடித்த வீரர்கள் மோதும் இந்த தொடர், லண்டன் ஆக்சிஜன் அரங்கில் நடைபெற்று வருகிறது. பீட் சாம்ப்ராஸ் பிரிவில் இடம் பெற்றிருந்த ரபேல் நடால், தனது முதல் லீக் ஆட்டத்தில் பெல்ஜியம் வீரர் டேவிட் காபினை (7வது ரேங்க்) எதிர்கொண்டார். டை பிரேக்கர் வரை இழுபறியாக நீடித்த முதல் செட்டில் நடால் 7-6 (7-5) என வென்று முன்னிலை பெற்றார். எனினும், அடுத்த 2 செட்களிலும் கடும் நெருக்கடி கொடுத்த காபின் 6-7 (5-7), 7-6 (7-4), 6-4 என்ற செட் கணக்கில் நடாலை வீழ்த்தினார். விறுவிறுப்பான இப்போட்டி 2 மணி, 37 நிமிடம் நடந்தது. கடுமையாகப் போராடி தோற்ற நடால், எஞ்சியுள்ள லீக் ஆட்டங்களில் விளையாடாமல் விலகிக் கொள்வதாக அறிவித்தார்.

இது குறித்து கூறுகையில், ‘முழங்கால் மூட்டு காயம் இன்னும் முழுமையாக குணமடையவில்லை. காபினுக்கு எதிராக இந்த அளவுக்கு தாக்குப்பிடிப்பேன் என நினைக்கவே இல்லை. ஆனால், வலி அதிகமாக இருப்பதால் இனியும் தொடர்ந்து விளையாட முடியாது. மிகவும் பெருமை வாய்ந்த உலக டூர் பைனல்சில் இருந்து விலகுவது வருத்தம் அளிக்கிறது. இதற்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்’ என்றார்.
இதுவரை 13 ஆண்டுகளில் சீசன் முடிவு டூர் பைனல்சுக்கு தகுதிபெற்றுள்ள நடால், அவற்றில் 6வது முறையாக பாதியில் விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது. எஞ்சியுள்ள 2 லீக் ஆட்டங்களில் அவருக்கு பதிலாக சக ஸ்பெயின் வீரர் பாப்லோ கரினோ புஸ்டா விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இதே பிரிவில் நடந்த லீக் ஆட்டத்தில் கிரிகோர் திமித்ரோவ் (பல்கேரியா, 6வது ரேங்க்) 6-3, 5-7, 7-5 என்ற செட் கணக்கில் ஆஸ்திரியாவின் டொமினிக் தியமை (4வது ரேங்க்) வீழ்த்தினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • AmazonSuperMarket

  பணியாளர்கள் இல்லாத ஆட்டோமெட்டிக் சூப்பர் மார்க்கெட்: அமேசான் நிறுவனம் திறப்பு

 • ManholeCoverJapan

  பாதாள சாக்கடையின் மூடிகளை அலங்கரித்து சாலைகளையும் அழகாக்கி வரும் ஜப்பான்..!

 • PhilippineValcanoErruption

  பிலிப்பைன்சில் உள்ள மேயான் எரிமலை வெடிக்கும் அபாயம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு..

 • WorldEconomicConference

  ஸ்விட்சர்லாந்தில் உலகப் பொருளாதார மாநாடு: பிரதமர் மோடி, நடிகர் ஷாரூக்கான் பங்கேற்பு

 • SWITZERLANDHeavySnow

  சுவிட்சர்லாந்து நாட்டில் வரலாறு காணாத பனிப்பொழிவு: சுற்றுலாப் பயணிகள் வருகை பாதிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்