SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிபா உலக கோப்பை கால்பந்து 60 ஆண்டில் முதல் முறையாக தகுதிபெற தவறியது இத்தாலி

2017-11-15@ 01:16:21

மிலன் : ஸ்வீடன் அணியுடன் நடந்த பிபா உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று 2ம் கட்ட பிளே ஆப் போட்டியில் 0-0 என டிரா செய்த இத்தாலி அணி, 60 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக பிரதான சுற்றுக்கு முன்னேறத் தவறியது. பிபா உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடர், ரஷ்யாவில் அடுத்த ஆண்டு ஜூன் 14ம் தேதி தொடங்கி ஜூலை 15ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் உலகம் முழுவதும் நடந்து வந்தன. ஐரோப்பிய பிரிவில் இருந்து நேரடியாக தகுதி பெறத் தவறிய 4 முறை சாம்பியனான இத்தாலி அணி, பிளே ஆப் போட்டியில் ஸ்வீடனுடன் மோதியது.

ஸ்டாக்ஹோமில் நடந்த முதல் கட்ட ஆட்டத்தில் இத்தாலி 0-1 என்ற கோல் கணக்கில் போராடி தோற்றது. இந்த நிலையில், மிலன் நகரில் நேற்று நடந்த 2ம் கட்ட பிளே ஆப் போட்டியில் அதிக கோல் வித்தியாசத்தில் வென்றாக வேண்டிய கட்டாயத்துடன் அந்த அணி களமிறங்கியது. எனினும், ஸ்வீடன் வீரர்களின் தற்காப்பு அரணை தகர்க்க முடியாமல் திணறிய இத்தாலி கோல் அடிக்கத் தவறியது. ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் 0-0 என சமநிலை வகித்ததால், முதல் கட்ட ஆட்டத்தில் 1-0 என வென்றிருந்த ஸ்வீடன் அணி உலக கோப்பைக்கு தகுதி பெற்றது. 60 ஆண்டுகளில் முதல் முறையாக உலக கோப்பை பிரதான சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் போனதால், இத்தாலி வீரர்களும் ரசிகர்களும் கண்ணீரில் மூழ்கினர்.

அந்த அணியின் நட்சத்திர வீரரும் கோல் கீப்பருமான ஜியான்லுகி பபான் (39 வயது) தேம்பி அழுதபடி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். முன்னணி வீரர்கள் ஆண்ட்ரியா பர்ஸாக்லி, டேனியல் டி ரோஸி, ஜார்ஜியோ சியலினி ஆகியோரும் ஓய்வு பெற முடிவு செய்துள்ளனர்.
இத்தாலி அணிக்காக 20 ஆண்டுகளில் 175 போட்டிகளில் விளையாடி உள்ள பபான், ‘உலக கோப்பைக்கு தகுதி பெற முடியாதது மிகுந்த வேதனை அளிக்கிறது. இதுவே எனது கடைசி சர்வதேச போட்டி என்பதில் வெட்கப்படுகிறேன்.

zஇதற்கு யாரையும் பலிகடா ஆக்க விரும்பவில்லை. அனைவரும் பொறுப்பேற்றுக் கொள்கிறோம். இத்தாலி அணிக்கு நிச்சயமாக நல்ல எதிர்காலம் அமையும். தோல்விகளில் இருந்து மீண்டு வருவோம்’ என்றார். பயிற்சியாளர் வென்ச்சுராவின்  ஒப்பந்தம் 2020 வரை உள்ள நிலையில், அவர் அதிரடியாக நீக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-10-2018

  24-10-18 இன்றைய சிறப்பு படங்கள்

 • FoamFightScotland

  முதலாம் ஆண்டு மாணவர்களை வித்தியாசமான முறையில் வரவேற்ற ஸ்காட்லாந்து பல்கலைக்கழம்: புகைப்படங்கள்

 • SALTMarchRashtrapti

  ராஷ்டிரபதி பவன் அருங்காட்சியகத்தில் புதிதாக வைக்கப்பட்டுள்ள காந்தியடிகளின் உருவ சிலைகள்: மாணவர்கள் கண்டுகளிப்பு

 • NagoroJapanVillage

  ஜப்பானில் உள்ள தீவில் வெறிச்சோடிய கிராமத்தை பொம்மைகளால் உயிரூட்டிய பெண்: குவியும் சுற்றுலா பயணிகள்

 • FallFoilageWorld

  உலகின் பல்வேறு நாடுகளில் எடுக்கப்பட்ட இலையுதிர் காலத்தின் அழகிய புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்