SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எஸ்.ஐ.க்கு பெண் காவலர் மசாஜ் : வைரலாகும் வீடியோவால் காவல்துறை அதிர்ச்சி

2017-11-15@ 01:16:19

ஐதராபாத் : தெலங்கானா மாநிலம், கட்வாலா மாவட்டத்தில் உள்ள ஜோகுலம்பாவில் ஆயுதப்படையில் துணை உதவி ஆய்வாளராக பணியாற்றுபவர் ஹாசன். ஆயுதப்படை அலுவலகத்தில் ஊர்க்காவல் படையை சேர்ந்த பெண் காவலர் ஒருவர் ஹாசனுக்கு மசாஜ் செய்வது போன்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் பொறுப்பில் உள்ள உதவி ஆய்வாளர் இதுபோன்று நடந்துகொண்டுள்ளது பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

உதவி ஆய்வாளருக்கு பெண் காவலர் மசாஜ் செய்யும் வீடியோ காட்சிகள் பல்வேறு தொலைக்காட்சிகளில் நேற்று திரும்ப திரும்ப ஒளிபரப்பப்பட்டன. இதனால் காவல்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மசாஜ் வீடியோ குறித்து விசாரணை நடத்தும்படி டிஐஜி உத்தரவிட்டார்.இது தொடர்பான முதல்கட்ட விசாரணையில் பல்வேறு தகவல்கள் தெரியவந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன், அலுவலகத்தில் பணியில் இருந்த உதவி ஆய்வாளருக்கு முதுகு வலி ஏற்பட்டுள்ளது.

இதனால் அவர் பெண் காவலரை வலி நிவாரணி தைலத்தால் தேய்த்து விடும்படி கூறியுள்ளார். உதவி ஆய்வாளர் கேட்டுக்கொண்டதற்கிணங்க பெண் காவலரும் அவருக்கு மருந்து தேய்த்துவிட்டதாக தெரிகிறது. இதனை அங்கிருந்த யாரோ வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். வலி காரணமாக மருந்து தேய்க்க கூறினாலும் இது பணி விதிமுறையை மீறிய செயல் என காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனிடையே சம்பந்தப்பட்ட உதவி ஆய்வாளர் ஹாசனை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கட்வாலா மாவட்ட எஸ்பி தெரிவித்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Hungarystudentsstruggle

    ஹங்கேரியில் கல்வி தரத்தை உயர்த்த கோரி ஆயிரக்கணக்கணக்கான மாணவர்கள் போராட்டம்

  • colambiaparaglidingworldcup

    கொலம்பியாவில் உலகக் கோப்பை பாராகிளைடிங் போட்டி: பல்வேறு பகுதியிலிருந்து வீரர்கள் உற்சாகமாக பங்கேற்பு

  • turkey_dust_storm

    துருக்கி, சிரியா ஆகிய நாடுகளில் வீசிய புழுதிப் புயல்: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • republic_vilaaa

    குடியரசு தின விழா : வண்ணமயமான ஒளியில் மின்னும் ராஷ்திரபதி பவன்

  • 20-01-2018

    20-01-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்