SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குழந்தைகளின் பாதுகாப்புக்கு அனைத்து முயற்சிகளும் அவசியம் : ஜனாதிபதி வலியுறுத்தல்

2017-11-15@ 01:16:14

புதுடெல்லி : மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த தினமான நேற்று குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு பல்வேறு துறைகளில் சாதனை படைத்த குழந்தைகளுக்கு ராஷ்டிரபதி பவனில் நேற்று ‘ராஜீவ் காந்தி மானவ் சேவா’ விருதுகள் வழங்கப்பட்டன. குழந்தைகள் நலனுக்காக பணியாற்றிய தொண்டு நிறுவனங்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. ராஷ்டிரபதி பவனில், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த குழந்தைகளுடன் ஜனாதிபதியை ராம்நாத் கோவிந்த் கொண்டாடினார்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகத்துக்கு அவர் அனுப்பியுள்ள வாழ்த்து செய்தியில், ‘‘குழந்தைகள் நாட்டின் எதிர்காலம். அவர்கள் பாதுகாப்புடனும், மகிழ்ச்சியுடனும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். ஒவ்வொரு குழந்தையும், மலர காத்திருக்கும் மொட்டு. குழந்தைகளுக்கு விருதுகள் வழங்குவதன் மூலம் அவர்களின் திறமையை நாம் ஊக்குவிக்கிறோம். குழந்தைகளின் நலனுக்காக பாடுபடும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளின் பங்களிப்பை நாம் அங்கீகரிக்கிறோம்’’ என கூறியுள்ளார். 

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • CherobylNuclearPowerplant

    32 ஆண்டுகளுக்கு முன் பேரழிவை உண்டாக்கிய செர்னோபில் அணுமின் நிலையத்தின் தற்போதயை நிலை: புகைப்படங்கள் வெளியீடு

  • ImmanueltrumpMeet

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சந்திப்பு: புகைப்படங்கள்

  • SvetlanaVillageRussia

    மாற்றுத்திறனாளிகள் மட்டுமே வாழும் அதிசய கிராமம்: சேவை நோக்கத்துடன் உடனிருக்கும் தன்னார்வ தொண்டர்கள்!

  • karaneeswarargod

    காரணீஸ்வரர் திருக்கோயில் சித்திரை திருவிழா : சவுடல் விமானத்தில் காரணீஸ்வரர்

  • TorontoPedestriansAttack

    கனடாவில் பாதசாரிகள் மீது வேன் ஏற்றி தாக்குதல்: 10 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்