SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி புதுமுக நடிகையை உல்லாசத்துக்கு அழைத்த இயக்குநர் : கேரள திரையுலகில் பரபரப்பு

2017-11-15@ 01:15:53

திருவனந்தபுரம்: சினிமாவில் நடிக்க வாய்ப்பு தர வேண்டுமானால் படுக்கையில் தன்னுடன் உல்லாசமாக இருக்க வேண்டுமென பிரபல மலையாள  இயக்குநர் தன்னை அழைத்ததாக புதுமுக நடிகை பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார். கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த புதுமுக நடிகை ஒருவர்  பட வாய்ப்புக்காக பெற்றோருடன் மும்பையில் குடியேறினார். மலையாள திரைப்படமான ‘டிராபிக்’ (இது தமிழில் ‘சென்னையில் ஒருநாள்’ என்ற  பெயரில் வெளியானது) இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் கொச்சி புதுமுக நடிகை நடித்துள்ளார்.

அந்த புதுமுக நடிகையை உல்லாசமாக இருக்க பிரபல இயக்குநர் ஒருவர் அழைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து அந்த புதுமுக நடிகை  கூறுகையில், பல விருதுகளை பெற்ற பிரபல இயக்குநர் ஒருவரை சென்று சந்திக்குமாறு என்னிடம் மலையாள திரையுலகை சேர்ந்த முக்கிய பிரமுகர்  ஒருவர் கூறினார். அதன்படி கொச்சியில் உள்ள பிரபல ஓட்டலில் இரவு 9 மணியளவில் அவரை சந்தித்து பேசினேன். அப்போது அவர் எந்தவித  கூச்சமும் இல்லாமல் என்னை படுக்கைக்கு அழைத்தார். இதைக்கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன்.

அந்த இயக்குநர் கூலாக, ‘மலையாள சினிமாவில் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளாமல் எந்த நடிகையும்  முன்னுக்கு வந்ததாக சரித்திரம் கிடையாது. எனவே என்னுடன் படுக்கையில் உல்லாசமாக இருந்தால் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருகிறேன்’ என  கூறினார். நான் அதற்கு ஒப்புக்கொள்ளாமல் ஊருக்கு திரும்பி வந்துவிட்டேன். அந்த இயக்குநரின் பெயரை நான் கூற விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Hungarystudentsstruggle

    ஹங்கேரியில் கல்வி தரத்தை உயர்த்த கோரி ஆயிரக்கணக்கணக்கான மாணவர்கள் போராட்டம்

  • colambiaparaglidingworldcup

    கொலம்பியாவில் உலகக் கோப்பை பாராகிளைடிங் போட்டி: பல்வேறு பகுதியிலிருந்து வீரர்கள் உற்சாகமாக பங்கேற்பு

  • turkey_dust_storm

    துருக்கி, சிரியா ஆகிய நாடுகளில் வீசிய புழுதிப் புயல்: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • republic_vilaaa

    குடியரசு தின விழா : வண்ணமயமான ஒளியில் மின்னும் ராஷ்திரபதி பவன்

  • 20-01-2018

    20-01-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்