SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மண்டல கால பூஜை சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு : புதிய மேல்சாந்திகள் பொறுப்பேற்கின்றனர்

2017-11-15@ 01:14:44

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த ஆண்டு மண்டலக்கால பூஜை நாளை தொடங்குகிறது. இதையொட்டி இன்று மாலை 5 மணிக்கு  ேகாயில் நடை திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரர் மகேஷ் மோகனர் முன்னிலையில் தற்போதைய மேல்சாந்தி டி.எம்.உண்ணிகிருஷ்ணன் நடை  திறந்து தீபாராதனை நடத்துகிறார். இதைத்தொடர்ந்து புதிய மேல்சாந்திகள் பொறுப்பேற்று கொள்கின்றனர். சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு  ஏ.வி.உண்ணிகிருஷ்ணனும், மாளிகைபுரத்தம்மன் கோயிலுக்கு அனிஷ் நம்பூதிரியும் புதிய மேல்சாந்திகளாக ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் இன்று மாலை 6 மணியளவில் பொறுப்பேற்றுக் கொள்கின்றனர். இதைத்தொடர்ந்து இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படுகிறது.  நாளை முதல் புதிய மேல்சாந்திகள் மண்டல கால பூஜைகளை நடத்துவர்.  41 நாட்கள் பூஜைக்கு பின் வரும் டிசம்பர் 26ம் தேதி மண்டல கால  பூஜைகள் நிறைவு பெறும். அன்றைய தினம் நடை சாத்தப்பட்டு மீண்டும் மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30ம் தேதி மாலை நடை திறக்கப்படுகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-10-2018

    21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • dussehraa_11

    நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்