SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்திய மசாலா பொருட்களுக்கு சீனாவில் அமோக வரவேற்பு

2017-11-15@ 01:12:49

பீஜிங்: இந்திய மசாலா பொருட்களுக்கு சீனாவில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.  சீனாவை சேர்ந்த ஆன்லைன் நிறுவனமான அலிபாபா, கடந்த  11ம் தேதி மாபெரும் விற்பனை திருவிழாவை நடத்தியது. இதில் சீன பொருட்கள் மட்டுமின்றி, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில்  உள்ள பொருட்களும் விற்கப்பட்டுள்ளன. மொத்தம் 3,000 கோடி டாலருக்கு (இந்திய மதிப்பில் சுமார்  ரூ.1.95 லட்சம் கோடி) வர்த்தகம் நடந்துள்ளது.

அன்றைய தினம் சுமார் 2,500 கோடி டாலருக்கு விற்பனை நடந்துள்ளது. முந்தைய ஆண்டை விட இது 39 சதவீதம் அதிகம். இதில் 1.4 லட்சம்  பிராண்ட் பொருட்கள் விற்கப்பட்டுள்ளன.  குறிப்பாக இந்தியாவில் இருந்து ஆயுர்வேத அழகு சாதன பொருட்கள், ரெடிமேட் உணவு வகைகள், மசாலா  பொருட்கள், தேயிலை விற்கப்பட்டுள்ளன.  இதில் இந்திய மசாலா பொருட்கள் விற்பனை அமோகமாக நடந்துள்ளதாக நிறுவன தரப்பில் கூறப்படுகிறது.  இதுகுறித்து வர்த்தகர் ஒருவர் கூறுகையில், இந்திய உணவு வகைகளுக்கு பல்வேறு நாடுகளில் வரவேற்பு உள்ளது. இதில் சீனாவும் விதிவிலக்கல்ல.  சீனாவில் இந்திய மசாலா பொருட்களுக்கு அடுத்ததாக, ஆயுர்வேத அழகு சாதன பொருட்கள், வீட்டு அலங்கார பொருட்கள் ஆகியவையும்  விற்கப்பட்டுள்ளன.

இந்திய பொருட்களை விற்க 100க்கும் மேற்பட்ட கடைகள் ஷாங்காய், பீஜிங் உள்ளிட்ட இடங்களில் இருக்கின்றன. இங்கு விற்பனை விலையை விட  இரண்டு மடங்கு முதல் மூன்று மடங்கு வரை அதிக விலைக்கு விற்கப்பட்டாலும் இந்திய பொருட்களின் தரத்தில் மயங்கிய சீனர்கள் இவற்றை வாங்க  தயங்குவதில்லை என்றார். இந்திய மசாலா பொருட்களில் குறிப்பாக ஏலக்காய், மஞ்சள் ஆகியவை சீனாவில் பெரும் வரவேற்பு பெற்றவை. இதுபோல் இந்திய இனிப்பு வகை விற்பனையும் சீன ஆன்லைன் நிறுவனங்களில் சக்கைப்போடு போடுகிறது. இவற்றை அரபு நாட்டவர்கள்,  ஐரோப்பியர்கள், அமெரிக்கர்கள் ஏராளமாக ஆர்டர் செய்வதாக வர்த்தக நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

கவர்ந்திழுத்த சிக்கன் கறி

சீனாவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஏராளமாக வருகின்றனர். இங்குள்ள 1000க்கும் மேற்பட்ட உணவகங்களின் மெனுவில் சிக்கன் கறி  சமீபகாலமாக இடம்பெற்று வருகிறது. இவர்கள் இந்தியாவில் மஞ்சள் கலந்து செய்யப்படும் ரெடிமேட் மசாலா பாக்கெட்களை வாங்கி இவற்றை  தயாரிக்கின்றனர். சீனர் வீடுகளிலும் இந்திய மசாலாவுடன் சிக்கன் கறியை மனைவிமார்கள் தயாரிக்கின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Greecemilitarydictatorship

    கிரேக்க நாட்டை ஆளும் ராணுவ சர்வாதிகாரத்திற்கு எதிராக மாணவர்கள் போராட்டம்

  • 18-11-2017

    18-11-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • afg_suicide_dead

    ஆப்கான் நாட்டில் அரசியல் கூட்டத்திற்கு அருகே நடந்த தற்கொலை படை தாக்குதலில் 9 பேர் பலி

  • GujaratAfricanSiddhi

    குஜராத்தில் ஆஃப்ரிக்க வம்சாவளியைச் சேர்ந்த சித்தி மக்கள்: பல நூற்றாண்டுகளாக இந்தியாவில் தஞ்சம்

  • Karthikayam

    இன்று கார்த்திகை மாத பிறப்பு : ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்