SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புதிதாக 2 கார்கள் பென்ஸ் அறிமுகம்

2017-11-15@ 01:11:47

சென்னை: மெர்சிடீஸ் பென்ஸ்நிறுவனம், பொன்விழா கொண்டாடத்தின் ஒரு பகுதியாக 12 கார்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதில் 6  மற்றும் 7வது தயாரிப்பாக  மெர்சிடீஸ் ஏஎம்ஜி சிஎல்ஏ 45 மற்றும் ஜிஎல்ஏ 45 4 மேட்டிக் ஆகிய 2 மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. மெர்சிடிஸ்  ஏஎம்ஜி சிஎல்ஏ 45, 1991 சிசி திறன் கொண்ட 2.0 லிட்டர் டர்போ இன்ஜின் கொண்டது. 0 - 100 கி.மீ வேகத்தை 4.2 விநாடிகளில் எட்டக்கூடியது. இதன்  ஏரோபதிப்பு ஆரம்ப விலை (எக்ஸ்ஷோரூமில்) ரூ.77.69 லட்சம்.

இதுபோல் ஏஎம்ஜி ஜிஎல்ஏ 45 4 மேட்டிக், 1991 சிசி திறன் கொண்ட 2.0 லிட்டர்  டர்போ இன்ஜின் கொண்டது. 0-100 கி.மீ. வேகத்தை 4.4 விநாடிகளில்  எட்டக்கூடியது. இதன் ஏரோ பதிப்பு ஆரம்ப விலை (எக்ஸ்ஷோரூமில்)  ரூ.80.67 லட்சம். இந்த 2 கார்களும் உச்ச பட்சமாக மணிக்கு 250 கி.மீ.  வேகத்தை எட்டக்கூடியவை.  இவற்றை மெர்சிடீஸ் பென்ஸ் இந்தியா மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி லோலண்ட் போல்கர்  அறிமுகம் செய்தார். ஈடு இணையற்ற சொகுசு விரும்புபவர்களை கவர்ந்திழுக்கும் வகையில் இந்த தயாரிப்புகள் திகழ்கின்றன. இந்திய  வாடிக்கையாளர்களுக்கு உலகளாவிய ஏஎம்ஜி தயாரிப்புகளை வழங்குவதில் நாங்கள் உறுதி கொண்டுள்ளோம் என அவர் கூறினார். டிரான்ஸ்கார்  இந்தியா நிறுவன நிர்வாக இயக்குநர் அப்துல் காதிர் அறிமுக விழாவில் பங்கேற்றார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Greecemilitarydictatorship

    கிரேக்க நாட்டை ஆளும் ராணுவ சர்வாதிகாரத்திற்கு எதிராக மாணவர்கள் போராட்டம்

  • 18-11-2017

    18-11-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • afg_suicide_dead

    ஆப்கான் நாட்டில் அரசியல் கூட்டத்திற்கு அருகே நடந்த தற்கொலை படை தாக்குதலில் 9 பேர் பலி

  • GujaratAfricanSiddhi

    குஜராத்தில் ஆஃப்ரிக்க வம்சாவளியைச் சேர்ந்த சித்தி மக்கள்: பல நூற்றாண்டுகளாக இந்தியாவில் தஞ்சம்

  • Karthikayam

    இன்று கார்த்திகை மாத பிறப்பு : ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்