SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இன்னும் 3 மாதங்களுக்குள் எப்எஸ்எஸ்ஏஐயிடம் இருந்து உரிமம் பெறாத ஓட்டல்களுக்கு சீல்

2017-11-15@ 01:10:55

* கோயில்களுக்கும் லைசென்ஸ் கட்டாயம்
* தர நிர்ணய ஆணையம் கடும் எச்சரிக்கை

புதுடெல்லி: எப்எஸ்எஸ்ஏஐ உரிமம் பெறாத ஓட்டல்களுக்கு சீல் வைக்கப்படும் என, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்  எச்சரிக்கை விடுத்துள்ளது.  பேக்கேஜ் உணவு பொருட்கள் உட்பட உணவு பொருட்களின் தரத்தை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய  ஆணையம் (எப்எஸ்எஸ்ஏஐ) கண்காணித்து வருகிறது. தரமற்ற, உடலுக்கு கேடு விளைவிக்கும் துரித உணவுகள், சுவையூட்டும் பொருட்கள் பயன்பாடு  தொடர்பாக அவ்வப்போது ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில்ல உரிமம் பெறாமல் நடத்தப்படும் ஓட்டல்கள் மீது நடவடிக்கை  எடுக்க முடிவு செய்துள்ளது.

 இதுகுறித்து எப்எஸ்எஸ்ஏஐ முதன்மை செயல் அதிகாரி பவன்குமார் அகர்வால் கூறியதாவது:  ஓட்டல் மற்றும் ரெஸ்டாரன்ட்கள் பல உரிமம் இன்றி  இயங்கி வருகின்றன. இவை உரிமம் எடுக்க மூன்று மாதம் அவகாசம் வழங்கப்படுகிறது. இதற்குள் உரிமம் பெறாவிட்டால் அவற்றை மூடி சீல் வைத்து  நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த விதிமுறை ஓட்டல்களுக்கு மட்டுமின்றி, இலவசமாக பிரசாதம் வழங்கும் வழிபாட்டு தலங்களுக்கும் பொருந்தும்.  அதேநேரத்தில் சிறிய அளவிலான உற்பத்தியாளர், தெருவோர கையேந்தி பவன்கள் போன்றவற்றுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை தொடர்பாக மாநிலங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக உணவு வர்த்தகத்தில் ஈடுபடுவோரிடையே உரிமம் பெறுவது  தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த மாநில அரசுகளை கேட்டுக்கொண்டுள்ளோம்.
 
உணவு துறை வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் அனைவரும் எப்எஸ்எஸ்ஏஐ உரிமம் பெறுவது கட்டாயமா என்பது தொடர்பாக பலரிடம் குழப்பம் இருந்து  வருகிறது. ஆனால், உணவு வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் எப்எஸ்எஸ்ஏஐ உரிமம் பெறுவது கட்டாயம்தான். இதுபற்றி மாநிலங்கள் மூன்று மாத அவகாசத்துக்குள் விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தியுள்ளோம். அதன்பிறகும் எங்களின் உரிமம் பெறாத  உணவகங்கள் மீது நடவடிக்கை எடுத்து சீல் வைப்பதற்கு அறிவுறுத்தியுள்ளோம்.

 இந்த மூன்று மாத அவகாசத்தில் அனைத்து உணவு வர்த்தக நிறுவனங்களும் எங்களது உரிமத்தை பெற்றிருக்க வேண்டும் என்று இதன்மூலம் உறுதி  செய்யப்படும். இந்த விஷயத்தில் ஒருபோதும் சமரசம் என்பதே கிடையாது.  கோயில்களில் பிரசாதங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. இருப்பினும்  இவையும் எங்களிடம் லைசென்ஸ் பெற வேண்டும் என தெரிவித்தார். உணவு பாதுகாப்பு மற்றும் தர சட்டப்படி, உரிமம் இல்லாமல் உணவு  வர்த்தகத்தில் யாரும் ஈடுபடக்கூடாது. உணவு உற்பத்தி, பதப்படுத்துதல், உணவு பேக்கேஜ், கேட்டரிங் சேவை, உணவு உற்பத்திக்கான பொருட்கள்  விற்பனை போன்றவர்களுக்கும் இது அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

வரப்போகிறது ரேட்டிங் முறை

உணவகங்கள் தங்கள் உரிமத்தை வாடிக்கையாளர் பார்க்கும் வகையில் பிரதானமாக வைத்திருக்க வேண்டும். இதில், குறைபாடுகள் குறித்து  வாடிக்கையாளர் தொடர்பு கொள்ள வேண்டிய விவரம், சம்பந்தப்பட்ட பகுதிக்கு உட்பட்ட உணவு ஆய்வாளர் பெயர், விவரங்கள் ஆகியவையும் இடம்பெற  வேண்டும். இதுபோல் சுகாதாரத்தை அளவிட ஹைஜீன், ஹைஜீன் பிளஸ் என்ற ரேட்டிங் முறைகளும் வர இருக்கின்றன என எப்எஸ்எஸ்ஏஐ  முதன்மை செயல் அதிகாரி அகர்வால் தெரிவித்தார்.

கண்காணிப்பாளர் தேவை

உணவு வர்த்தகத்தில் ஈடுபடும் பலர், தங்கள் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் உணவு பொருளின் தரத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய  கண்காணிப்பாளர் யாரையும் நியமிப்பதில்லை. விரைவில் இதுவும் கட்டாயம் ஆக்கப்பட இருக்கிறது. அதாவது, உணவு பாதுகாப்பு மற்றும் தரத்தை  உறுதி செய்வதற்கான படிப்பு முடித்த தகுதியான ஒரு நபரை உணவு உற்பத்தி நிறுவனங்கள் நியமிக்க வேண்டிவரும்.

* எப்எஸ்எஸ்ஏஐ உரிமம் பெற உணவகங்களுக்கு 3 மாதம் கெடு.
* கோயில்கள், வழிபாட்டு தலங்களுக்கும் லைசென்ஸ் முறை பொருந்தும்.
* கையேந்தி பவன்களுக்கு கவலையில்லை.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • america_winterstorm2018

  வடகிழக்கு அமெரிக்க பகுதிகளில் தொடங்கியுள்ள முதல் பனிப்புயல்!

 • 2018wildfire_trumph

  கலிபோர்னியா காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட டிரம்ப்

 • asiapacific_meet

  ஆசிய பசிபிக் வர்த்தக பேச்சு வார்த்தையை முன்னிட்டு சர்வதேச தலைவர்கள் சந்திப்பு

 • maldevmodi

  மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழா : பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு

 • delhi_elephanthostpl

  டெல்லியில் யானைகளுக்கான ஸ்பெஷல் மருத்துவமனை!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்