SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தாவூத்தின் 3 சொத்துக்கள் ரூ.11.58 கோடிக்கு ஏலம் : இஸ்லாமிய அறக்கட்டளை வாங்கியது

2017-11-15@ 01:05:36

மும்பை : மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்படும் தாவூத் இப்ராகிமின் 3 சொத்துக்கள் நேற்று ரூ.11.58 கோடிக்கு ஏலம் விடப்பட்டது. இந்த மூன்று சொத்துக்களையும் இஸ்லாமிய அறக்கட்டளை ஒன்று வாங்கியது. மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வரும் தாவூத் இப்ராகிம்  சொத்துக்களை மத்திய அரசு கையகப்படுத்தியுள்ளது. அதனை நிதியமைச்சகம் ஏலம் விட்டு வருகிறது. மூன்று சொத்துக்கள் நேற்று ஏலம் விடப்பட்டது. பெண்டி பஜாரில் உள்ள டாமர்வாலா கட்டிடத்தில் இருக்கும் 6 வீடுகள், ஓட்டல் ரவுனக் அப்ரோஸ், சப்னம் ஹெஸ்ட் ஹவுஸ் ஆகியவை ஏலத்தில் விடப்பட்ட சொத்துக்கள் ஆகும்.

இவை சர்ச்கேட்டில் உள்ள நிதியமைச்சகத்திற்கு சொந்தமான அலுவலகத்தில் ஏலம் விடப்பட்டது. 12க்கும் மேற்பட்டோர் ஏலத்தில் கலந்துகொண்டனர். கடந்த வாரம் ஏலத்தில் கலந்து கொள்ள முன் பணம் செலுத்திய நபர்களுக்கு சொத்துக்களை அதிகாரிகள் நேரில் பார்வையிட ஏற்பாடு செய்து கொடுத்திருந்தனர். நேற்று நடந்த ஏலத்தில் மூன்று சொத்துக்களையும் சைபி புர்ஹானி அப்லிப்மென்ட் என்ற இஸ்லாமிய அறக்கட்டளை ஏலத்தில் எடுத்துள்ளது. ரூ.11.58 கோடிக்கு 3 சொத்துக்களும் ஏலம் போனது. டாமர்வாலா கட்டிடத்தில் உள்ள வீடுகள் ரூ.3.53 கோடிக்கும், ரவுனக் அப்ரோஸ் ஓட்டல் ரூ.4.53 கோடிக்கும், சப்னம் கெஸ்ட் ஹவுஸ் ரூ.3.52 கோடிக்கும் ஏலம் போனது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • CherobylNuclearPowerplant

    32 ஆண்டுகளுக்கு முன் பேரழிவை உண்டாக்கிய செர்னோபில் அணுமின் நிலையத்தின் தற்போதயை நிலை: புகைப்படங்கள் வெளியீடு

  • ImmanueltrumpMeet

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சந்திப்பு: புகைப்படங்கள்

  • SvetlanaVillageRussia

    மாற்றுத்திறனாளிகள் மட்டுமே வாழும் அதிசய கிராமம்: சேவை நோக்கத்துடன் உடனிருக்கும் தன்னார்வ தொண்டர்கள்!

  • karaneeswarargod

    காரணீஸ்வரர் திருக்கோயில் சித்திரை திருவிழா : சவுடல் விமானத்தில் காரணீஸ்வரர்

  • TorontoPedestriansAttack

    கனடாவில் பாதசாரிகள் மீது வேன் ஏற்றி தாக்குதல்: 10 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்