SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வாரம் ஒரு கப் காபி போதும் இதயநோய் ஆபத்து வராதாம்

2017-11-15@ 01:05:36

கலிபோர்னியா : வாரம் ஒரு கப் காபி அருந்துபவருக்கு, இதய நோய் ஆபத்து குறைவாக உள்ளது என விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள பர்மிங்ஹாம் இதய ஆய்வு மையத்திற்கு கடந்த 34 ஆண்டுகளாக இதய பரிசோதனைக்கு வரும் 2750 பேரிடம் அவர்கள் சாப்பிடும் உணவை அடிப்படையாக கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.  அந்த ஆய்வறிக்கையில்  கூறப்பட்டுள்ளதாவது:
 கலிபோர்னியாவின் அனஹமில் நடந்த அமெரிக்க அறிவியல் மற்றும் இதய  கூட்டமைப்பில் நேற்று இது தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த ஆய்வில் வாரம் ஒரு கப்  காபி அருந்துபவர்களுக்கு இதயநோய் ஆபத்து குறைவாக உள்ளது தெரியவந்துள்ளது.

காபி சாப்பிடாத பிறரை ஒப்பிடுகையில் வாரம் ஒருமுறை, ஒரு கப் காபி அருந்துபவர்களுக்கு இதய நோய் ஆபத்து 7 சதவீதம் குறைவாக உள்ளது. மேலும் இதய கோளாறு ஏற்படுவதும் 8 சதவீதம் அளவுக்கு குறைவாக உள்ளது. ஆனால், முந்தைய ஆய்வுகள் ஒரு குறிப்பிட்ட அளவு காபி குடித்தால் தான் இதய ஆபத்து குறையும் என்று பரிந்துரை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வு, இதய செயல்பாடு குறைவு மற்றும் இதய நோய் தொடர்பான கூடுதல் தகவல்களை தந்துள்ளதாக ஆய்வில் பங்கேற்ற மூத்த விஞ்ஞானி டாக்டர் டேவிட் கோ தெரிவித்துள்ளார். மேலும், இந்த ஆய்வு முடிவுகள், இதயம் தொடர்பாக இதுவரை கண்டறியப்படாத பிற ஆபத்துக்களை கண்டறிய உதவும். இவ்வாறு ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-02-2018

    18-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • policecampchennai

    சென்னையில் காவலர் குறைதீர்ப்பு முகாம்: காவல்துறை தலைவர் டி.கே.ராஜேந்திரன் பங்கேற்பு

  • 2018Underwaterphotos

    2018ம் ஆண்டின் நீருக்கடியில் எடுத்த சிறந்த புகைப்படங்களுக்கான விருதுகளை பெற்ற படங்களின் தொகுப்பு..

  • modi_iran_president

    டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் - பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர் சந்திப்பு

  • mexico_earhquake

    மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 7.2 அலகுகளாக பதிவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்