SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ராஜிவ்காந்தி கொலை வழக்கு தண்டனையை நிறுத்தி வைக்க கோரும் பேரறிவாளன் மனுவுக்கு பதிலளிக்க வேண்டும்

2017-11-15@ 01:05:34

புதுடெல்லி :  தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி பேரறிவாளன் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு மத்திய அரசு 2 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கடந்த 1991ம் ஆண்டு மே 21ம் தேதி பெரும்புதூரில் மனித வெடிகுண்டுகளால் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டது. இந்த நிலையில் ஆயுள் தண்டனையை அனுபவித்து வரும் பேரறிவாளன், 26 ஆண்டுக்கும் மேலாக சிறையில் உள்ளார். இதனால் ஜெயலலிதா ஆட்சியின்போது பேரறிவாளனை விடுதலை செய்ய மாநில அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியது. ஆனால் 2 ஆண்டுகளாகியும் மத்திய அரசு இது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை. இந்நிலையில் தன்னை  விடுதலை செய்யக்கோரி பேரறிவாளன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், `‘ராஜிவ் கொலை வழக்கில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுக்கு தேவையான பேட்டரிகளை கொலையாளிகளுக்கு வழங்கியதாக என் மீது குற்றம்சாட்டி தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த கொலையை விசாரித்து வரும் சிபிஐ வெடிகுண்டு தொடர்பான வழக்கில் என் மீதான குற்றச்சாட்டை நிருபிக்கவில்லை.  18 ஆண்டுகளாக நடந்து வரும் விசாரணை இன்னும் முடிவுக்கு வரவில்லை. எனவே சிபிஐ விசாரணை முடியும் வரை எனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும்’’ என கோரிக்கை விடுத்திருந்தார். வழக்கு நேற்று உச்ச நீதிமன்றத்தில், நீதிபதிகள் ரஞ்சன் கோகாய் மற்றும் நவீன் சின்ஹா முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இது தொடர்பாக 2 வாரத்தில் மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • CherobylNuclearPowerplant

    32 ஆண்டுகளுக்கு முன் பேரழிவை உண்டாக்கிய செர்னோபில் அணுமின் நிலையத்தின் தற்போதயை நிலை: புகைப்படங்கள் வெளியீடு

  • ImmanueltrumpMeet

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சந்திப்பு: புகைப்படங்கள்

  • SvetlanaVillageRussia

    மாற்றுத்திறனாளிகள் மட்டுமே வாழும் அதிசய கிராமம்: சேவை நோக்கத்துடன் உடனிருக்கும் தன்னார்வ தொண்டர்கள்!

  • karaneeswarargod

    காரணீஸ்வரர் திருக்கோயில் சித்திரை திருவிழா : சவுடல் விமானத்தில் காரணீஸ்வரர்

  • TorontoPedestriansAttack

    கனடாவில் பாதசாரிகள் மீது வேன் ஏற்றி தாக்குதல்: 10 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்