SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டாஸ்மாக் கடை மீண்டும் திறக்கும் விவகாரம் தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் கண்டனம்

2017-11-15@ 01:05:16

சென்னை: டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டு வருவதற்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் பாலு தொடர்ந்த வழக்கில் எடப்பாடி  பழனிசாமி அரசிற்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழக அரசின் செயல்பாடுகள் அரசின் பொறுப்பற்ற தன்மையை  காட்டுவதாக உள்ளது என மிக கடுமையாக உயர்நீதிமன்றம் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

பித்தலாட்டத்தையும், மோசடி தனத்தையும் தன் இரண்டு கண்களாக கொண்டு செயல்படும் எடப்பாடி தலைமையிலான அரசு வழக்கம் போல மோசடி  தனம் என்று தனது 420 அக்மார்க் குணத்தை நீதிமன்றத்திலும் காட்டியுள்ளது. டாஸ்மாக் கடைகளை திறக்கும் முயற்சியில் சென்னை உயர்நீதிமன்றம்  விளக்கம் கேட்டதாக பொய்யான, மோசடியான தகவலை தமிழக அரசு நேற்று (13ம் தேதி) உச்சநீதிமன்றத்தில் பதிவு செய்ததற்கு சென்னை  உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு இன்று(14ம் தேதி) தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. எடப்பாடி அரசின் இந்த வேலை தமிழக மக்களுக்கு  அதிர்ச்சியையும், அவமானத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

டாஸ்மாக் கடைகள் விவகாரத்தில் ஜெயலலிதா வகுத்த பாதையில் செல்லாமலும் மக்கள் நலன் சார்ந்து சிந்திக்காமலும் இந்த அரசு செயல்பட்டு  வருகிறது. 420 என்று இவர்களை விமர்சனம் செய்தால் ஆத்திரம் கொண்டு வானத்திற்கும், பூமிக்கும் துள்ளிகுதித்து புனிதர்கள் போல் பொங்கினார்கள்.  இன்று இவர்களது மோசடி தனத்தை உயர்நீதிமன்றமே கண்டித்திருக்கிறது. எடப்பாடி தலைமையிலான இந்த அரசு விடைபெறும் நாளை தமிழகம்  ஆவலோடு எதிர்பார்க்கிறது. இவ்வாறு கூறியுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Greecemilitarydictatorship

    கிரேக்க நாட்டை ஆளும் ராணுவ சர்வாதிகாரத்திற்கு எதிராக மாணவர்கள் போராட்டம்

  • 18-11-2017

    18-11-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • afg_suicide_dead

    ஆப்கான் நாட்டில் அரசியல் கூட்டத்திற்கு அருகே நடந்த தற்கொலை படை தாக்குதலில் 9 பேர் பலி

  • GujaratAfricanSiddhi

    குஜராத்தில் ஆஃப்ரிக்க வம்சாவளியைச் சேர்ந்த சித்தி மக்கள்: பல நூற்றாண்டுகளாக இந்தியாவில் தஞ்சம்

  • Karthikayam

    இன்று கார்த்திகை மாத பிறப்பு : ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்