SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மதுக்கடைகளை மூடுவதாக கூறிவிட்டு மக்களை ஏமாற்றும் வகையில் புதிதாக டாஸ்மாக் கடைகள் திறப்பதா? : தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

2017-11-15@ 01:03:58

சென்னை: மேலும் பல இடங்களில் டாஸ்மாக் கடைகளை புதிதாக திறக்கும் விபரீத விளையாட்டு வேண்டாம் என்று மு.க.ஸ்டாலின் தமிழக அரசுக்கு  கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில்  கூறியிருப்பதாவது: மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்பட்டு பூரண மதுவிலக்கு என்ற நிலை எய்தப்படும் என 2016 சட்டமன்ற தேர்தலில்  வாக்குறுதி அளித்து விட்டு, பல வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டதைப் போல, இன்று புதிதாக மதுக்கடைகளை திறப்பதற்காக, உச்ச நீதிமன்றம்  வரை குதிரை பேர அரசு ஓடோடிச் சென்று வாதிட்டுக் கொண்டிருப்பது வேதனை அளிப் பதாக உள்ளது.

சில்லரை மதுபான கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைக்கப்படும், கடைகளின் எண்ணி க்கை குறைக்கப்படும் பின்னர் சில்லரை மதுபான கடைகளுடன்  இணைந்த பார்கள் மூடப் படும், குடிப்பழக்கத்திற்கு உள்ளாகி இருப்போரை மீட்பதற்கான மீட்பு நிலையங்கள் அமைக் கப்படும், என்று மோசடி தேர்தல்  வாக்குறுதிகளை அளித்து தமிழக மக்களை நம்ப வைத்து ஏமாற்றியிருக்கிற குதிரை பேர அரசின் கொடூர மனப்பான்மைக்கு, திமுக சார்பில் கடும்  கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக அரசு, பதிலாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வலுவிழக்க வைக்கும் விதத்தில், மாநகராட்சி, நகராட்சி,  பேரூ ராட்சி பகுதிகளின் வழியாக செல்லும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட் சிகளின் சாலைகளாக வகைமாற்றம் செய்து, மீண்டும்  தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை களில் டாஸ்மாக் கடைகளைத் திறக்க முயற்சிப்பது, சமூகத் தீமைக்கும் பெண்குலத்தின் போராட்டத்திற்கும்  சிவப்புக் கம்பளம் விரிக்கும் இந்த அரசின் விபரீத மனநிலையைப் பிரதிபலிக்கிறது.

 தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் ஏற்கனவே நடைபெற்றுக் கொண்டிருக்கும் விபத் துகளால் பல குடும்பங்கள் தங்கள் எதிர்காலத்தை  தொலைத்து விட்டுத் தெருவில் நிற்கின் றன. இந்தக் கடைகளால் தங்களின் வாழ்வாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள சவாலையும் ஆபத்தை யும் சமாளிக்க  முடியாமல் தாய்மார்கள் திணறிக் கொண்டிருக்கிறார்கள்.  இதுபோன்ற சூழ்நிலையில்தான் மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை எதிர்த்து தாய்  மார்கள் தன்னெழுச்சியாகக் கடும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பெண்கள் என்றும் பாராமல் இந்த குதிரை பேர அரசு காவல்துறையை ஏவி, காது  கேட்காத அளவிற்கு அறை ந்து அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டாலும், தாய்மார்களின் போராட்டம் தணிய வில்லை.

தங்கள் பகுதியில் அமைதியும், நிம்மதியும் பறிபோய்க் கொண்டிருக்கிறது என்று வெகுண்டெழுந்து கிராம மக்கள் போராடி வருகிறார்கள். ஆனால் சட்டம்  ஒழுங்கு, பொது அமைதி, பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் என எது பற்றியும் துளியும் கவலைப்படா மல், டாஸ்மாக் கடைகளின்  எண்ணிக்கையை எப்படியும் உயர்த்தி விடும் குறுகிய மனப் பான்மையில், வருமானம் ஒன்றையே கவனத்தில் வைத்து இந்த அரசு செயல்படுவது  கண்டி க்கத்தக்கது.

குடிமக்களின் துயரத்தையும், அவர்களின் உடல்நலத்திற்கு விளைவிக்கும் கேடுகளையும் புரிந்து கொள்ள மறுத்து இந்த அதிமுக அரசு தள்ளாடிக்  கொண்டிருக்கிறது. குடிப்பழக்கத் திற்கு உள்ளாகி இருப்போரை மீட்போம் என்று வாக்குறுதி அளித்து, வஞ்சித்து வாக்குகளை பெற்று விட்டு, இன்றைக்கு  குடிப்பழக்கத்தை ஊக்குவித்து அதிகரித்திடும் அபாயப் பாதை யில் ஆர்வத்துடன் பயணிக்கும் இந்த குதிரை பேர அரசை மக்கள் என்றைக்கும் மன்னிக்க  மாட்டார்கள். எண்ணற்ற குடும்பங்களை இன்னல் சுழலில் தள்ளிவிடுவதற்காக, எங்கு காணினும் டாஸ் மாக் கடைகள் என்ற மதிமயக்க நிலையை  ஏற்படுத்தப் போராடிக் கொண்டிருக்கும் இந்த மக்கள் விரோத அரசுக்கு கடும் கண்டனத்தை மீண்டும் தெரிவித்து, தான் அடித்த மூப்பில் டாஸ்மாக்  கடைகளைத் திறக்கும் முடிவை குதிரை பேர அரசு உடனடியாகக் கைவிட்டு, ஏழை எளிய நடுத்தரக் குடும்பங்களைக் காப்பாற்ற வேண்டும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 21-10-2018

  21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • dussehraa_11

  நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

 • 20-10-2018

  20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • tirupathivavacha

  திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

 • kulasaidasaraeight

  வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்